Friday 1 January 2016

பருவ மழை விட்டும் குழி விழுவது விட வில்லையே – கரூர் நகராட்சியில் நான்காவது முறையாக விழுந்த திடீர் பள்ளத்தினால் பரபரப்பு – சுமார் 20 அடி தூரத்தில் விழுந்த இந்த திடீர் பள்ளத்தினால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது



பருவ மழை விட்டும் குழி விழுவது விட வில்லையே – கரூர் நகராட்சியில் நான்காவது முறையாக விழுந்த திடீர் பள்ளத்தினால் பரபரப்பு – சுமார் 20 அடி தூரத்தில் விழுந்த இந்த திடீர் பள்ளத்தினால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது

கரூர் நகராட்சிக்குட்பட்ட இராஜாஜி நகர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வடகிழக்கு பருவ மழை நீடித்ததாலும், பாதாள சாக்கடை பணியின் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென பள்ளம் விழுந்தது. இந்த பள்ளத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி., எம்.எல்.ஏ காமராஜ், மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், கரூர் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பிறகு சரிசெய்தனர். ஆனால் அடுத்த நாள் சரிசெய்த பிறகும் அதே இடத்தில் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டது. மேலும் சுமார் 3 லாரிகள் மண் அடித்தும் அந்த இடத்தில் திடீர் ஏற்பட்ட பள்ளத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் பரபரப்புக்குள்ளான நேரத்தில் மீண்டும் அந்த ரோட்டின் அருகே உள்ள ரத்தினம் சாலை கே.எம்.சி காலனி, பங்களாபுதூர் பகுதியில் திடீரென குழி ஏற்பட்டது. இந்த குழிகளினால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் கரூர் நகராட்சி சார்பிலும், மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி திடீரென இந்த திடீர், திடீரென ஏற்படும் குழிகளை ஆய்வு செய்யவும், மண் பரிசோதனை செய்யவும் சென்னையில் இருந்து வல்லுநர்களை வரவழைத்து சோதனை நடத்த உத்திரவிட்டார். இந்நிலையில் தற்போது எந்த வித மழையும் ஏற்படாத நிலையில் இராஜாஜி நகர் தொடக்கதில் அதாவது மாரியம்மன் கோயில் கார்னரில் திடீரென சுமார் 2 மீட்டர் விட்டத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் சுமார் 20 அடி ஆழம் பள்ளம் ஏற்பட்டுள்ளதை நேரில் பார்த்தவர்கள் வியப்புடன் தெரிவித்துள்ளனர். மேலும் போக்குவரத்து திடீரென மாற்று வழியில் முடக்கி விடப்பட்டு, அந்த திடீர் பள்ளத்தினை ராட்சித ஜே.சி.பி இயந்திரம் கொண்டு சரி செய்து வருகின்றனர். இச்சம்பவத்தினால் கரூர் நகராட்சிக்குட்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மேலும்  அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment