தமிழர்களின் பாரம்பரிய
விளையாட்டு மற்றும் பாரம்பரிய திருநாள் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டை ஒரு மாற்றம் தாய்
பிள்ளையாக இந்தியாவில் ஒரு நாடு என நினைத்துள்ளதாக தற்போதைய பிரதமர் மோடி நினைத்து
இருக்கிறார். அதாவது பிரதமர் மோடி தனது சூறாவளி சுற்றுப்பயணம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு
சென்று வருவது மற்ற கட்சியினருக்கும் பலத்த சந்தேகங்களை எழுப்பிய நிலையில் காங்கிரஸ்
கட்சி தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோ எனக்கு ஒரு ஆசை உள்ளது என கரூரில் நடைபெற்ற
காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் மனமுருகி பேசினார். அதில் அவர் எல்லா நாட்டிற்கும்
சென்று வந்த பிறகு அவரை சந்திரனுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று பொதுக்கூட்டத்தில்
பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில் தமிழக மக்களை, இலங்கை விவகாரத்தில் மட்டுமில்லாமல்,
இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை சார்ந்த மக்களையும் மோடி அரசு ஒரு மாற்றந்தாய் பிள்ளையாக
தான் பார்க்கிறது என்பதை நாம் எப்படி உணர்கிறோம் சற்று பார்ப்போம்.
அதாவது தமிழ்நாடு
என்பது இந்தியாவில் கடைசி முனை, இந்த தமிழகத்தில் பிரதமர் மோடி சார்ந்த பா.ஜ.க கட்சியினை
யாரும் ஊக்குவிக்காமல் அனைவரும் அ.தி.மு.க வினருக்கே வாக்களித்ததையடுத்து தற்போது மத்தியில்
ஆளுகின்ற பா.ஜ.க அரசானது பா.ம.க வை சார்ந்த அன்புமணி இராமதாசுவையும், பா.ஜ.க வை சார்ந்த
பொன்.இராதாகிருஷ்ணனை மட்டும் தேர்ந்தெடுத்தது. இந்நிலையில் மற்ற அனைத்து அதாவது 39
தொகுதிக்கு 37 தொகுதியில் பா.ஜ.க கட்சி படுதோல்வி அடைந்ததோடு, அந்த 37 தொகுதியையும்
தமிழகத்தை ஆளுகின்ற அ.தி.மு.க அரசை சார்ந்த பிரதிநிதிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் இந்த சூழலில் தமிழகத்தை முற்றிலும் பிரதமர் மோடி வெறுத்துள்ளதாக தெரிகிறது,
எப்படி என்றால், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசில் டெல்லி யில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்
ஆம் ஆத் மி கட்சியை சார்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் அந்த டெல்லி சட்ட சபை தேர்தலில் முன்னிலை
பிடித்து அதிகபடியான வாக்குகள் பெற்று முதல்வரானதுடன், அந்த நிகழ்ச்சிக்கு பிரதமர்
மோடியையும் வரவழைக்க கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் மோடியோ அவருக்கு பதில் அமைச்சரை
மட்டும் கலந்து கொள்ள அனுமதித்தார். அந்த நாள் முதல் கவர்னரை நியமனம் செய்வதில் இருந்து
ஏராளமான விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை உள்குத்து அரசியலில் குளறு படி செய்தது பா.ஜ.க
கட்சி. இந்நிலையில் தற்போது அங்கே எப்படி சட்டசிக்கலை ஏற்படுத்தினாரோ, அப்படி தான்
தமிழகத்திலும், முதல்வர் ஜெ சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவுடன் சாதானந்தா
கவுடா மத்திய சட்ட துறை அமைச்சராக இருந்த போது, காவிரியில் குறுக்கே மேலும் அணைகள்
கட்டுவோம் என உறுதி பட தெரிவித்தையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் போராடின.
இந்நிலையில் அ.தி.மு.க கட்சியானது போராட வில்லை, காரணம் சொத்து குவிப்பு வழக்கில் குன்ஹா
தீர்ப்பிற்கு பிறகு முத்துக்குமாரசாமி நீதிபதி விடுத்த தீர்ப்பை அடுத்து, மத்தியில்
ஆளும் சுப்பிரமணிய சுவாமியை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மோடி, இந்நிலையில்
தமிழகம் வந்த மோடி, முதல்வர் ஜெ வை மரியாதை நிமித்தமாகவும், கூட்டணிக்கு அஸ்திவாரமாகவும்,
பார்த்தார். இதற்கு முன் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரியாதை நிமித்தமாக பார்த்தார்.
இதிலிருந்து கூட்டணி என்பது உறுதியாகி விட்டது. இருப்பினும், மறைமுகமாக தமிழர்களுக்கு
பல நல்ல காரியங்களை முதல்வரே செய்தாலும், செய்ய நினைத்தாலும், அவரது சொத்து குவிப்பு
வழக்கையும், அந்த தீர்ப்பை மத்திய அரசின் பங்கையும் காட்டி மிரட்டுவதாக சமூக நல ஆர்வலர்களுக்கும்,
பொது நல ஆர்வலர்களுக்கும் தெரிகிறது.
பண்டைய காலம் முதல்
இந்த காலம் முதல் வரை தமிழர்களின் பாரம்பரிய விழாவாக பொங்கல் திருநாளை தமிழர்கள் சிறப்பித்து
வருகின்றனர். இந்நிலையில் மோடி அரசு தமிழர்களுக்கு அதாவது தனது பா.ஜ.க விற்கு வாக்களிக்காத
மக்களுக்கு உரிய பாடம் கற்பிக்கவே இந்த ஜல்லிக்கட்டின் மீதான தடை என்பது உறுதியாக தெரிகிறது.
இந்நிலையில் மத்திய அரசை முதல்வர் ஜெ மீறுகிறாரோ ? அல்லது உச்சநீதிமன்றத்தில் சொத்து
குவிப்பு வழக்கை காட்டி மத்திய அரசு மிரட்டுகிறதா ? ஜெ வையும், ஜெ அரசாங்கத்தையும்
தெரியவில்லை.
ஆனால் இந்நிலையில் ஆலந்தூரில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஆயிரம் பேருக்கு பொங்கல்
பொருட்களை பரிசாக வழங்கிய கனிமொழி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஜல்லிக்கட்டு
விவகாரத்தில் தமிழக அரசை மட்டுமே குற்றம்சாட்டினாரே தவிர மத்திய அரசை குற்றம்
சாட்ட வில்லை ஏனென்றால் தி.மு.க விற்கும் கூட்டணி பிரச்சினை மற்றும் தற்போதைய
ஆளுகின்ற மத்திய அரசு அங்கம் வகிக்கும் 2 ஜி ஸ்பெக்ட்ரெம் முறைகேடு எல்லாவற்றையும்
பார்த்து தானே பேட்டி கொடுக்கனும், மேலும்
ஜல்லிக்கட்டுக்கு தடை வருவதற்கு
முழுக்க முழுக்க அதிமுக அரசு தான் காரணம் என்றும். கடந்த 2010 ஆம் ஆண்டில் திமுக
ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்த போது திமுக அரசு போராடி அனுமதி பெற்று
தந்தது. ஆனால் இன்று அதிமுக அரசு ஜல்லிக்கட்டு தடையை சட்ட ரீதியாக அனுகாமல்
ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது.
நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு
மனு விசாரணையின் போது பீட்டா அமைப்பினரின் வழக்கறிஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை
பெறுவதில் உறுதியாக இருந்தனர். ஆனால் தமிழக அரசு சார்பில் எந்த வழக்கறிஞர்களும்
ஆஜராகவில்லை. தமிழக அரசு நினைத்திருந்தால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
கிடைத்திருக்கும் என கனிமொழி தெரிவித்தாரே தவிர ஒரு இடத்தில் கூட மத்திய அரசை
குற்றம் சாட்ட வில்லை. ஏனென்றால் கூட்டணி மற்றும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு என
எல்லாவற்றையும் குடுமிப்புடியில் மோடி வைத்திருக்கிறார்.
ஒரு புறம் இவர்களின் கூட்டணி பேரத்திற்கு தமிழர்களின் பாரம்பரிய
விளையாட்டா ? போதைக்கு ஊறுகாயான ஜல்லிகட்டு விவகாரம் என்கின்றனர் பொது நல
ஆர்வலர்கள்
No comments:
Post a Comment