Thursday 28 January 2016

கரூர் பரணிபார்க் கல்விக்குழுமத்தில் சாரண, சாரணீயத்தில் "முயல் குட்டி" பிரிவிற்கு சின்னம் சூட்டு விழா


பரணிபார்க் கல்விக் குழுமத்தில் கே.ஜி வகுப்பு மழலைகளுக்கு சாரண, சாரணீயத்தில்  "முயல் குட்டி" பிரிவில் "சின்னம் சூட்டும் விழா" நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் சாரண மாவட்டத்தின்  முதன்மை ஆணையரும், பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளருமான S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார்பரணிபார்க் சாரண மாவட்டத்தின் சாரணீய ஆணையரும், பரணிபார்க் கல்விக் குழுமத்தின் செயலாளருமான பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார்.

பரணிபார்க் மாவட்டத்தின் சாரண ஆணையரும், பரணிபார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வருமான முனைவர் C.ராமசுப்பிரமணியன்  பேசுகையில் "முயல் குட்டி" சின்னம் சூட்டும் விழாவிற்கான விளக்கத்தையும், சாரண, சாரணீய இயக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி கூறினார். மேலும் சிறுவயதிலிருந்தே மாணவ, மாணவிகளை சாரண, சாரணீயத்தில் இணைப்பதன் மூலம் மாணவர்களிடையே சிறந்த ஒழுக்கம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பெரியோர்களை மதிக்கும் நற்பண்பு, பிறர்க்கு உதவும் பண்பு, தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ளுதல் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவை மேலோங்கும் என்பதில் ஐயமில்லை என்று கூறினார்.

பரணிபார்க் சாரண மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக நடைபெற்ற சின்னம் சூட்டும் விழாவில்  316 மழலையர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது.  316  "முயல் குட்டி" பிரிவு மழலையர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இவ்விழாவில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான  ஏற்பாடுகளை பரணிபார்க் கல்விக்குழுமத்தின் நிர்வாக அலுவலர் M.சுரேஷ் மற்றும் பரணிபார்க் மாவட்டத்தின் சாரணீய செயலர்  R.பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment