Sunday 31 January 2016

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படுமென எதிர்பார்ப்பு


முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
  
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 28 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டுகள் நிறைவேற்றப்பட்ட அரசு திட்டங்கள், வெள்ள நிவாரண பணிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும். பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது
 
மேலும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை கூட்டத் தொடர் பிப்ரவரி 2வது வாரம் தாக்கல் செய்ய இருக்கிறது. எனவே, இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சட்ட திருத்தம் கொண்டுவருவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது

No comments:

Post a Comment