தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களிடம் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், மேலும் முறைகேடாக கட்டணம் வசூலிப்பதாகவும் நீண்ட காலமாக புகார் இருந்து வந்தது . மேலும் இக்கோயிலில் ஆண்டு தோறும் 22 கோடி ரூபாய் வருமானம் வரும் ஆனால் நடப்பாண்டில் ரூ 18 கோடி வருமானம் வந்துள்ளது. இதுவும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .
இதனையடுத்து சென்னை அறநிலைய துறை அதிகாரிகள் நெல்லை இந்து சமய அறநிலைய மண்டல இணை ஆணையர் லட்சுமணன் தலைமையில் 30 பேர் இன்று கோயிலுக்கு வந்தனர் .
நாழிக்கிணறு, விடுதி, மொட்டை போடும் இடம் , விஐபி நுழைவு மையம், வாகன காப்பகம் உள்ளிட்ட கட்டணம் வசூலிக்கும் மையங்களில் சோதனை நடத்தினர் .
சீசன் காலம் , விடுமுறை தினம், புத்தாண்டு என பக்தர்கள் தற்போது அங்கு லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர் . அதிகாரிகளின் ரெய்டை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

No comments:
Post a Comment