அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா இன்று ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து என்னை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நீக்கியுள்ளார். துக்ளக் ஆண்டு விழாவில் நான் இன்றைய அரசியல் நிகழ்வுகளைத்தான் பேசினேன். அதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. என்னை கட்சியில் இருந்து நீக்கி இருப்பதால் நான் எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க விரும்பவில்லை. எனது எம்.எல்.ஏ. பதவியை இன்றே ராஜினாமா செய்து விட்டேன்.
இன்று நடக்கும் பத்திரிகை யாளர் சந்திப்பு முதல்- அமைச்சர் அம்மாவுக்கு எதிரானது அல்ல. இந்த ஆட்சியில் மதுவினால் பெரும் கேடு ஏற்படுகிறது. மதுவிலக்கை அமல்படுத்த இயலாது என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறும் கருத்தை ஏற்க இயலாது. மதுவைத் திறந்த கருணாநிதியே அதை மூடுவதாக அறிவித்துள்ளார். எல்லா தலைவர்களும் மது விலக்கு வேண்டும் என்று தான் கோரிக்கை வைக்கிறார்கள்.
என் வாழ்வின் முதல் சிறை வாசம் கூட மது விலக் குக்காகத்தான் இருந்தது. முதல்-அமைச்சர் அம்மா வின் அரசியல் அணுகு முறை எனக்கு பழக்கப்பட வில்லை.
எனவேதான் என்னை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார்கள். அது நியாயமானதுதான்.
அ.தி.மு.க.அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து என்னை முதல்வர் அம்மா நீக்கியுள்ளார். இந்த தகவலைக் கூட நமது தொலைக்காட்சி நண்பர்கள்தான் தொலைப்பேசியில் இரவு எனக்குத் தெரிவித்தனர்.அவர் என்னை கட்சியல் இருந்து நீக்கியதாக அறிவித்ததை மனப்பூர்வமாக ஏற்கிறேன். என்போது அவர் என்னை கட்சியில் இருந்து நீக்கினாரோ, அப்போது எனது காரில் இருந்து கட்சிக் கொடியை எடுத்துவிட்டேன்.
நான் எனது மனசாட்சிப்படி நடந்து கொள்வதால், எப்போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு விட்டேனோ, உடனே எனது கைப்பட ராஜினாமா கடிதத்தையும் எழுதி விட்டேன். அதைக் கொடுக்க முடியவில்லை.மேலும் நான் எம்.எல்.ஏ. பதவிக்கு வர அம்மாதான் காரணம். தேர்தலுக்கு முன்பே என்னை எம்.எல்.ஏபதவிக்கு வர அம்மாதான் காரணம் தேர்தலுக்கு முன்பே என்னை எம்.எல்.ஏ.வாக வேண்டியவர் நீங்கள் என்று சொல்லி தேர்தலில் நிறுத்தியவர்கள்.
அவரும், அ.தி.மு.க. தொண்டர்களும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால் எம்.எல்.ஏ. ஆனது வெறும் கவுரவத்துக்காக அல்ல. நாம் எதிர்க்கட்சியாக இருந்து எதை செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கிறோமோ, அதை ஆளும் கட்சியாக மாறி சாதிக்க வேண்டும் என்றுதான். ஆனால் அது முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment