Monday, 4 January 2016

அம்மாவின் ஆணைக்கினங்க கரூரில் மாபெரும் பேரணி அம்மா பேரவை சார்பில் நடைபெறுகிறது – மாவட்ட அம்மா பேரவை செயலாளர் காமராஜ் அறிவிப்பு



தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொது செயலாளருமான ஜெயலலிதா ஆணைக்கினங்க அம்மா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 65616 வாக்குச்சாவடிக்குட்பட்ட 5 கோடியே 62 லட்சம் வாக்காளரிடத்தில் தமிழக அரசின் சாதனையையும், அ.தி.மு.க அரசின் கொள்கைகளையும் எடுத்துக் கூறும் விதத்தில் நூறு விழுக்காடு முழுமையான வெற்றியை பெற்றிட வேண்டி தமிழகம் முழுவதும் பேரணி (06-01-15) காலை பேரணி நடைபெற உள்ளது. இதையடுத்து கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் 6 ம் தேதி  காலை அஜந்தா திரையரங்கம் எதிரில் பேரணியாக நடைபெற உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி குறித்து கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் தெரிவித்ததாவது., மாண்புமிகு தமிழகத்தின் நிரந்தர முதலவர் அம்மா உத்திரவுக்கிணங்க., தமிழக வரலாற்றில் இவ்வையகத்தில் இதுவரை யாரூம் சிந்தித்திடாத வளர்ச்சித்திட்டங்களை எல்லாம், தொலைநோக்கு திட்டங்களை எல்லாம், மக்கள் நலன் காக்கும் திட்டங்களை எல்லாம், உலகம் போற்றுகின்ற உன்னத திட்டங்களை எல்லாம், வாரி, வாரி வழங்கி இந்நாட்டு மக்களையெல்லாம் நலமோடும், வளமோடும் வாழவைத்து இந்திய திருநாட்டில், தாய் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கி தந்து தமிழ் இனம் காத்து நிற்கும் தமிழர் குல சாமி அம்மா இதய தெய்வத்தின் செயல்திட்டங்களை இந்த நாடறியும், இருப்பினும் புதிய வாக்காளர்களும் அறிந்திடும் வகையில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா உத்திரவிற்கிணங்க இந்த பேரணி நடைபெற உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேரணியில் அம்மா சீருடை அணிந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வதோடு, பிற அணி நிர்வாகிகளும், அ.தி.மு.க கட்சியினரும் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பேரணியை மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை துவக்கி வைக்க உள்ளார். மேலும் தமிழக தொழிற்துறை அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சருமான தங்கமணி, கழக அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ வுமான பாப்பாசுந்தரம், மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கழக அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மாவின் செயல்திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென மாவட்ட ஜெ பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment