Wednesday, 20 January 2016

தமிழகம் முழுவதும் வரும் 24, 26 தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடப்படும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு




தமிழகத்தில் வரும் 24, 26 ஆம் தேதிகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளையும் மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்திரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் வள்ளலார் நினைவு தினம், குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 24, 26 தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகத்தில் சென்னை, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.,
டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள் மற்றும் அதனை சேர்ந்த பார்கள், கிளப்புகளை சேர்ந்த பார்கள், ஓட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல் 3(ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் 24, 26 தேதிகளில் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். இந்த தினங்களில் உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதாலும், எதிர்கட்சிகள் மதுவிலக்கு தொடர்பான கருத்துக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும், சில நாட்களாக மாநில அரசு இந்த பிரச்சனையை கையிலெடுத்து சில மாறுதல்களை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
முழுமையான மதுவிலக்கு கொண்டு வராவிட்டாலும், நடைமுறைக்கு உகந்த மக்களுக்கு பெரிய அளவு பாதிப்பில்லாமல் மாறுதல் கொண்டு வருவது பிற்காலத்தில் மதுவிலக்கு கொண்டு வர நல்ல முன் உதாரணமாக அமையும்.

No comments:

Post a Comment