Monday 4 January 2016

இந்தியா நேபாளம் இடையே 27 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை


இந்தியா நேபாளம் நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியில் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
உத்தர்காண்ட் மாநிலம், சம்பாவாட் மாவட்டத்தில் உள்ளது பான்பாஷா நகர். இது நேபாள நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ளது. நேபாள நாட்டின் கான்சன்பூர் நகரிலிருந்து பான்பாஷா நகர் வழியாக புது தில்லிக்கு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. அது 27 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நட்பு ரீதியிலான அந்த பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டது.
இதை இரு நாடுகளின் எல்லையையொட்டி வசிப்பவர்கள் வரவேற்றுள்ளனர். குடும்ப ரீதியாகவும், வணிக ரீதியாகவும் அவர்களுக்குள் உறவு இருந்து வருகிறது.
நேபாளம் நாட்டின் கான்சன்பூர், தண்டில் துரா, வோட்டி, சாபேன், அஷம், கலாலி, ஜாக்புத்தா மற்றும் சித்தார்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த பேருந்து வசதியை பயன்படுத்தி வந்தனர்.
குளிரூட்டப்பட்ட வசதியுடைய அந்த பேருந்தின் இருபக்கங்களிலும் இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளின் கொடிகள் வரையப்பட்டுள்ளன. நேபாளம் நாட்டின் கான்சன்பூர் பகுதிக்கு அதிகாலை 6 மணிக்கு செல்லும் பேருந்து, அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும்.
இந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு எவ்வித சிறப்பு ஆவணங்களும் தேவை இல்லை. பயணிகளுக்கு இலவச வை-ஃபை வசதியும், சுத்தமான குடிநீரும் இலவசமாக வழங்கப்படுகிறது

No comments:

Post a Comment