Sunday 3 January 2016

மக்களவை துணை சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பெரும் பரபரப்பு



மக்களவை துணை சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட  பொதுமக்களால் பெரும் பரபரப்பு – கடந்த 4 ½ வருடங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராததால் ஆத்திரமடைந்த பொதுமக்களால் சிறைபிடித்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
கரூர் பெருநகராட்சியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கி வந்த மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பித்துரை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி கொடுத்து வந்த நிலையில் திடீரென பசுபதிபாளையம் உயர்மட்ட பாலப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஐந்து ரோடு, பகுதியில் திடீரென பொதுமக்கள் மற்றும் ஏராளமான பெண்கள் திடீரென முற்றுகையிட்டு அப்பகுதியிலும், கருப்பாயி கோயில் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும், செய்து தாராததை கண்டித்து திடீரென மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அருணா ஆகியோரை சிறைபிடித்து நீதி கேட்டு முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுமார் ½ மணி நேரமாக நீடித்த இந்த போராட்டத்தில் பெண்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரையும், மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியும் திகைக்க, திகைக்க முழித்தனர். மேலும் இந்த சம்பவம் அறிந்த மாஜி அமைச்சரும், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி தப்பித்து ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment