Thursday, 28 January 2016

மனைவியின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை, கள்ளக்காதலுடன் சேர்த்து கொலை செய்த மனைவி மற்றும் கூலிப்படை ஆட்கள் என 4 பேருக்கு இரட்டை ஆயுள் விதித்து கரூர் விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு



கரூர் மாவட்டம், குளித்தலை போலீஸ் சரகம், நடுவதியம் பகுதியில் வசித்தவர் கருணாமூர்த்தி இவர், அப்பகுதியில் கூலித்தொழில் புரிந்து வந்துள்ளார். கடந்த 2013 ம் ஆண்டு அவருக்கு (வயது 33), இவரது மனைவி தமிழ் செல்வி, இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிய நிலையில் அதே பகுதியை சார்ந்த பஷீர் முகமது என்பவருக்கும், தமிழ் செல்விக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்த கணவன் கருணாமூர்த்தியை, தமிழ் செல்வியும், அவரது கள்ளக்காதலுனமாக பஷீர் முகம்மது மற்றும் பஷீர் முகம்மதுவின் நண்பர்களான கிருஷ்ணராயபுரம் பகுதியை சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டு சதி செய்து திட்டமிட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து. குற்றம் சட்டப்பட்டவர்கள் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் விரைவு மகிளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், சதி திட்டம் தீட்டியது, திட்டமிட்டு கொலை செய்தது என மேற்கண்ட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு, ரூ 2 ஆயிரம் அபராதத்தொகையையும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு காவலர்கள் கொண்டு சென்றனர். கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை, கள்ளக்காதலுடன், மனைவியே கூலியாட்கள் வைத்து கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் மட்டுமில்லாமல் நீதிமன்ற வரலாற்றிலேயே மிகுந்த   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment