Sunday, 31 January 2016

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த 3 மாணவிகள் வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடி எஸ்பியிடம் ஒப்படைப்பு




கள்ளக்குறிச்சி அருகே எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர் பான ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் வசம் சின்னசேலம் போலீஸார் ஒப்படைத்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதி மன்றத்துக்கு மாற்றக் கோரி கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன் றத்தில் சிபிசிஐடி போலீஸார் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகளான சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 பேரும் கடந்த 23-ம் தேதி கிணற்றில் இருந்து பிணமாக சின்னசேலம் போலீஸாரால் மீட்கப் பட்டனர். 3 மாணவிகளும் தற் கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதை பெற்றோர் ஏற்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக, கல்லூரி தாளாளர் வாசுகியின் மகன் ஸ்வாகத் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகிய இருவரையும் 25-ம் தேதி சின்ன சேலம் போலீஸார் கைது செய்தனர்.
தாம்பரம் நீதிமன்றத்தில் தாளா ளர் வாசுகி 26-ம் தேதி சரண டைந்தார். வாசுகியை கள்ளக் குறிச்சி நீதிமன்றத்தில் நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பிப்ரவரி 4-ம் தேதி வரை வாசு கியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.
இந்நிலையில், வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி நேற்று காலை விழுப் புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவல கத்துக்கு வந்தார். மாணவிகள் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஒப்படைத்தார். பின்னர், விழுப்புரம் எஸ்பி நரேந் திர நாயரை நாகஜோதி சந்தித்து வழக்கு விவரம் கேட்டறிந்தார்.
இந்த வழக்கு விசாரணையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத் தில் சிபிசிஐடி சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, வழக்கு விசாரணையை சிபிசிஐ டிக்கு மாற்றியதால் நேற்று முன் தினம் போலீஸ் காவலுக்கு அனுப் பப்பட்ட வாசுகியை நீதிமன்றத்தில் நேற்று போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவின் பேரில், கடலூர் பெண்கள் மத்திய சிறைக்கு வாசுகியை போலீஸார் அழைத்துச் சென்றனர். எனவே, வாசுகியை சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நாளை (பிப்.1) சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment