Monday, 4 January 2016

தமிழ் மொழியை சொம்மொழி என்ற பெயரில் வியாபாரமாக்கிய மைனாரிட்டி கட்சியினருக்கு புத்தி புகட்டும் வகையில் தமிழ் மொழியை அரசு அலுவலகங்களில் ஒளியால் மிளரச் செய்தவர் அம்மா – கரூர் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் அதிரடி பேச்சு


தமிழக முதல்வர் அம்மா பிறந்தநாளை தமிழக அளவில் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும் அ.தி.மு.க கரூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கரூர் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் சூளுரைத்தார்.
மேலும் கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகம் தினம் தினம் தற்போது கூட்டங்கள் நடைபெற்றுவருவதோடு, விழாக்கோலம் பூண்டுள்ளது. தினந்தினம் ஒவ்வொரு கூட்டமாக நடைபெறும் கூட்டத்திற்கு அ.தி.மு.க அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அம்மாவின் பிறந்த நாள் வரும் பிப்ரவரி மாதம் 24 ம் தேதி உலகமெல்லாம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அளவில் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும், மேலும் தமிழக அளவில் பிற அணிகள் சார்பிலும், மாவட்ட அளவிலும் சுவர் விளம்பரம் செய்வதில் கரூர் மாவட்டம் முந்தியுள்ளது என்றார். மேலும் தமிழ் மொழியை சொம்மொழி என்றும் அதற்கு மாநாடு நடத்தி கோடி, கோடியாக கொள்ளையடித்து தனது குடும்பத்திற்கு நிதி சேர்த்த மைனாரிட்டி கட்சியினர் மத்தியில் நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலில் அரசு அலுவலகங்கள், நகராட்சி, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அலுவலகங்களில் தமிழ் வாழ்க என்ற மொழியில் ஒளியேற்றி மிளிர விட்டார். இந்த புகழ் நமது புரட்சித்தலைவி அம்மா ஒருவருக்கே சாறும் என்றார். மேலும் கடந்த மைனாரிட்டி ஆட்சியில் மின்சாரம் என்பது இப்பவா ? அப்பவா ? என நடனமாடியது. இருப்பினும் அம்மா ஆட்சியில் எல்லாவற்றையும் சரி செய்து தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பது அவருக்கு தெரியாதா ? என்றார்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசிய உடன் அடுத்தடுத்து மாவட்ட ஜெ பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சாகுல் அமீது, கு.வடிவேலு, நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் பேசினர். மேலும் இக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. 

No comments:

Post a Comment