Saturday, 16 January 2016

திருக்குறளை உலகிற்கு கொடுத்த திருவள்ளுவரின் 2047 அம் தின விழா கரூர் திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் முற்றோதல் நடத்தி வழிபாடு





திருக்குறளை உலகிற்கு கொடுத்த திருவள்ளுவரின் 2047 அம் தின விழா கரூர் திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் முற்றோதல் நடத்தி வழிபாடு
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் – கரூரில் திருவள்ளுவர் உருவ படத்திற்கு மாலை அணிவித்த திருக்குறள் பேரவை செயலாளர் அரசுக்கு கோரிக்கை
திருக்குறளை இயற்றிய வள்ளுவர் பெருந்தகையான திருவள்ளுவருக்கு விழா இன்று உலகெங்கும்  கொண்டாடப்பட்டு வரும் வேலையில் கரூரில் திருக்குறள் பேரவையின் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியை ஒட்டி கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமையில் திருவள்ளுவரின் திரு உருவபடத்திற்க்கு மாலை அணிவித்து அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி திருக்குறள் முற்றோதல் செய்து குழந்தைகளுக்கு இனிப்புகள் , நாட்காட்டி , திருவள்ளுவரின் சிறப்பு மலர்கள் வழங்கப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் கவிஞர் நன்செய்ப் புகழூர் அழகரசனார், கவிஞர் கருவை வேணு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கரூர் காந்திகிராமம் ஸ்ரீனிவாசா பள்ளி தளாளர் ஸ்ரீனிவாசன், பள்ளி முதல்வர் பத்மாவதி, ஆநிலை பாலகிருஷ்ணன், கா.ப.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதுகுறித்து கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிளும் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு, திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டுமெனவும், அதற்கு மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மேலும் கரூர் காந்திகிராமத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு ரூ 4லட்சம் மதிப்பிலான பூங்கா அமைக்கப்பட்டுஅதில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது இன்று வரையிலும் எவ்விகித பராமரிப்பு இன்றி அச்சிலை சிதிலமடந்துள்ளது. இதனை கரூர் மாவட்ட நிர்வாகமும், கரூர் நகராட்சியும் சீர்செய்ய வேண்டும் என்றும்  இத்திருநாளில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தார்   

No comments:

Post a Comment