Wednesday 20 January 2016

கரூர், ராமேஸ்வரம், ஸ்ரீவில்லிப்புத்தூர், திண்டுக்கல் உட்பட 69 கோயில்களுக்கு ஒரே நாளில் குடமுழுக்கு!!


தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் இன்று ஒரே நாளில் 69 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இதற்காக கரூர், ராமேஸ்வரம், ஸ்ரீவில்லிப்புத்தூர், திண்டுக்கல், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. கரூரில் உள்ள கச்சேரி பிள்ளையார் கோயிலிலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், திருவண்ணாமலை பருவதமலை கோயில் என தமிழக இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட 69 கோயில்களில் இன்று குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ராமேஸ்வரத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் குடமுழுக்கு நடைபெற்றது. அங்கு 22 சன்னதிகளின் விமானங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க விமானம், ராஜகோபுரம், கருடாழ்வார், பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழில் சசிகலா பங்கேற்றார். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இந்த குடமுழுக்கையொட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் அன்னதான விருந்து வழங்கப்பட்டது. இதேபோல் புதுவையிலும் 25 கோயில்களுக்கு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மேலும் இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment