Wednesday 6 January 2016

அ.தி.மு.க சட்டசபை தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கியது 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்களை நேரில் சந்திக்க திட்டம்



சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி விட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்குள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று அறிவித்ததுடன் வேட்பாளர்கள் பட்டியலையும் முன்கூட்டியே வெளியிட்டு பிரசாரத்தையும் தொடங்கி விட்டார். 

தமிழகம்-புதுவையில் 40 தொகுதியிலும் 100 சதவீத வெற்றி என்ற முழக்கத்துடன் பிரசாரத்தை தொடங்கினார். எதிர்பார்த்தது போலவே 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக அமர்ந்து தமிழ் நாட்டின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. 

அதே போல் சட்டசபை தேர்தல் பிரசாரத்தையும் அ.தி.மு.க. முன்கூட்டியே இன்று தொடங்கி விட்டது. இதற்கு ‘‘சாதனை விளக்க லட்சிய பிரச்சார பேரணி’’ என்று அ.தி.மு.க. பெயர் சூட்டி உள்ளது. முதல் கட்ட மாக அ.தி.மு.க.வின் கிளை அமைப்பான ஜெயலலிதா பேரவை சார்பில் இந்த பிரசாரம் தொடங்கப்பட் டுள்ளது.  ஏகாதசி திதியான இன்று காலை 7.30 மணிக்கு மேல் 9 மணி வரை எமகண்டம் என்பதால் அதற்கு முன்ன தாகவே காலை 7 மணிக்கே தமிழ்நாடு முழுவதும் 50 மாவட்டங்களிலும் பிரசா ரத்தை தொடங்கியது. 

தமிழ்நாட்டில் 65,616 வாக்குசாவடிகளுக்கு உள்பட்ட 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்களையும் அ.தி.மு.க.வினர் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். 
இதற்காக அ.தி.மு.க.வினர் வீடு தேடி வந்து ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளையும் நலத்திட்ட உதவிகளையும் எடுத்துக் கூறி ஆதரவு கேட்கிறார்கள். சென்னையில் உள்ள 4 மாவட்டங்களிலும் இன்று காலை 7 மணிக்கு பிரசாரத்தை தொடங்கினார்கள். தொடர்ந்து வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுகிறார்கள்

No comments:

Post a Comment