Wednesday, 6 January 2016

கரூரில் அம்மா பேரவை சார்பில் சாதனை விளக்க லட்சியப் பேரணி - மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை துவக்கி வைத்தார்




தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கினங்க அம்மா பேரவை சார்பில் இன்று அ.தி.மு.க ஆட்சி சாதனை விளக்க லட்சிய பேரணி மிகுந்த எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் நடந்தது.
இந்த பேரணியில் அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று சாதனை விளக்க புத்தகங்களை வழங்கினார்கள்.
கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இப்பேரணிக்கு கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் தலைமை வகித்தார். மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை இப்பேரணியை துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், கரூர் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ் உள்பட சுமார் 3 ஆயிரம் நபர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
வெள்ளை பேண்ட், ஜெயலலிதா படம் போட்ட ‘டி’ சர்ட் அணிந்த வாக்கு சேகரிப்பாளர்கள் கொடிகளை ஏந்தி அணிவகுத்து சென்றார்கள்.
பேரணியாக சென்றபோது வீடுகளில் இருந்து மக்கள் வெளியே மகிழ்ச்சியுடன் வந்து சாதனை புத்தகங்களை வாங்கி சென்றார்கள்.
சென்ற இடமெல்லாம் மக்கள் அன்புடன் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.
இதனை பார்க்கும்போது முதலமைச்சர் ஜெயலலிதா மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
மேலும் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் காலை 7–45 மணி அளவில் இந்த லட்சிய பேரணி நடைபெற்றது.
முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை யாரும் சிந்தித்திராத வகையில் ஏராளமான தொலைநோக்கு திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள், உலகம் போற்றும் உன்னதமான திட்டங்கள், மக்களை காக்கும் மகத்தான திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா வாரி வாரி வழங்கினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் வெளிமாநிலத்தவர் மட்டுமல்ல. உலகமே வியந்து பாராட்டியது.
வாக்குறுதிகள் நிறைவேற்றம்
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் சொல்லாத ஏராளமான திட்டங்களையும் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்.
அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா திட்டம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் என எண்ணற்ற மக்கள் திட்டங்களை கொண்டு வந்து மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
இல்லத்தரசிகள் சிரமம் அறிந்து அவர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, பள்ளி மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப், சைக்கிள், 14 வகை உபகரணங்கள், ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறார்.
தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக்கி இருக்கிறார். பல்வேறு துறைகளில் மத்திய அரசின் விருதுகளும் கிடைத்துள்ளன.
65,616 வாக்குச்சாவடி
தமிழகம் முழுவதும் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் உள்ளன. 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகள் பற்றிய விவரங்கள் ஒவ்வொரு வாக்காளரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் லட்சியப் பேரணி நடத்த ஜெயலலிதா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார். இவருக்கு கீழ் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் காமராஜ் இதற்கான முழு ஏற்பாடுகளை செய்து இருந்தார். மேலும் இப்பேரணியில் 100 சதவிகித வெற்றி
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஜெயலலிதா நிறுத்தும் வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்யும் வகையில் இந்த லட்சிய பேரணி நடைபெற்றது.
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் ஜெயலலிதா பேரவை சார்பில் வாக்கு சேகரிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வாக்குச்சாவடி வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கு சேகரிப்பாளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வ கடிதம் கொடுக்கப்பட்டது.
வாக்கு சேகரிப்பாளர்களுக்கு வெள்ளை பேண்ட், வெள்ளை டி. சர்ட் வழங்கப்பட்டுள்ளது. இன்று பேரணியில் பங்கேற்ற அனைவரும் வெள்ளை பேண்ட், டி.சர்ட் அணிந்து சென்றார்கள். டி.சர்ட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டிருந்தது. வாக்கு சேகரிப்பாளர் என்று எழுதப்பட்டிருந்தது.
வாக்கு சேகரிப்பாளர் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். எத்தனை முறை வீடுகளுக்கு செல்ல முடியுமோ அத்தனை முறை நேரில் சென்று சாதனைகளை சொல்லி ஓட்டுக்களை பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து வாக்கு சேகரிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று வாக்கு சேகரிப்பாளர்கள் பணியை துவக்கினார்கள்.
பிரமாண்ட பேரணி
ஒவ்வொரு மாவட்டத்திலும் மிக பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. அமைச்சர்கள் இந்த பேரணியை ஆங்காங்கே துவக்கி வைத்தனர். பேரணியில் ஜெயலலிதா பேரவையை சேர்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அந்தந்த மாவட்ட கழக செயலாளர் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், அணி செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
பேரணியல் சென்றவர்கள் அண்ணா தி.மு.க. கொடிகளை ஏந்தியும், பேனர்களை பிடித்து கொண்டும் சென்றார்கள்.
40 பக்க சாதனை புத்தகம்
ஜெயலலிதா ஆட்சி சாதனை புத்தகங்களை வீடு வீடாக சென்று வழங்கினார்கள்.
சாதனை புத்தகம் 40 பக்கங்களை கொண்டது. 40 பக்கங்களும் வண்ண கலரில் பளபளக்கும் பேப்பரில் அச்சிடப்பட்டிருந்தது. முதல் பக்கத்தில் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டிருந்தது.
‘‘நமது லட்சியம் உயர்வானது; நமது பார்வை தெளிவானது; நமது வெற்றி முடிவானது. வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு; சிந்திப்போம்; உண்மைக்கு துணை நிற்போம்; மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான புனித அரசை என்றும் ஆதரிப்போம். இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்போம்’’ என்று முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அண்ணா தி.மு.க. கொடியுடன் இரட்டை இலை சின்னமும் அச்சிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பக்கத்திலும் ஜெயலலிதா ஆட்சி சாதனைகள், ஜெயலலிதாவின் முக்கிய பேச்சுக்கள், மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவி படங்கள், அன்னை தெரசா, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஹிலாரி கிளிண்டன் ஆகியோருடன் உள்ள படங்களும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை ஒவ்வொருவரும் விரும்பி வாங்கினார்கள். இதனை படித்து பார்த்து பத்திரப்படுத்தி வைத்து கொண்டனர். இப்பேரணிக்கான முழு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட அம்மா பேரவையினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இப்பேரணியில் முன்னாள் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.செந்தில்நாதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொரணி.கணேஷன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment