Friday, 10 July 2015

காமராஜரின் 113 வது பிறந்தநாள் விழா – கரூரில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் மாபெரும் சிறப்பு சேவைகள்

கல்வி கண் திறந்தவரும், தமிழகத்தின் தலை சிறந்த முன்னாள் முதல்வரான  காமராஜரின் பிறந்தநாள் விழா வரும் 15 ம் தேதி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் நிறுவனத்தலைவர் மறைந்த காரத்தே செல்வின் நாடார் அவர்கள் ஏற்படுத்திய இக்கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை அக்கழகத்தின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சிங் நாடார் உத்திரவின் பேரில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதனையொட்டி கரூர் மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் வரும் 15 ம் தேதி காலை கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சி குறித்து காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் கரூர் மாவட்டச் செயலாளர் மீ.முகேஷ் தெரிவிக்கையில் அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு நாங்கள் மரியாதை செலுத்த உள்ளோம், மேலும் கர்மவீரர் காமராஜரின் 113 பிறந்த நாள் விழாவையொட்டி கரூர், தொழிற்பேட்டை, தில்லை நகரில் உள்ள சக்தி தமிழ்ப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் வழங்க உள்ளதாகவும், மேலும் அப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகளும், புத்தகங்களும், சிலேட்டுகளும் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். இவ்விழாவில் அரசியல் பாகுபாடின்றி, சாதி சமயம் இன்றி அனைவரும் கலந்து கொண்டு கர்மவீரரின் புகழைக் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் இவரை பற்றி தொடர்பு கொள்ள 8012499885

No comments:

Post a Comment