Sunday 5 July 2015

பச்சக்குழந்தையை அதாவது இரண்டு வயது சிறுவனை குடிக்க வைத்து வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் வாட்ஸ் அப் எடுத்த மனிதர்கள் - மிருகங்களா ?

சிறு குழந்தைக்கு ஊற்றிக்கொடுத்து குடிக்க வைக்கும் காட்சி வாட்ஸ் அப்பில் அதிர வைக்குது

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உயிர் நலத்தைக் கெடுக்கும் என்று அரசே டாஸ்மாக் என்னும் சாராயக்கடையை திறந்து வைக்குது, இருப்பினும் ஆண்கள், வயதானவர்கள் குடித்தது போய், தற்போது பெண்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் குடிக்கும் காட்சி தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் சிறு பச்சக்குழந்தைக்கு மதுவை ஊற்றி அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் போட்ட காட்சி பெற்றோர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், பொதுமக்களிடமிடையிலேயும், சமூக நல ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்களை மீண்டும் தொடராமல் இருக்க இந்த வாட்ச் அப்பில் இருக்கும் இரு சக்கர வாகன எண் TN 25 AJ 8209 என்ற எண்ணுடைய வண்டி இந்த வாட்ஸ் அப்பில் இருப்பதால் உடனே இந்த சம்பவத்தை தடுக்க அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாளைய சமூகம் நலமுடன் வாழும்

No comments:

Post a Comment