Wednesday 8 July 2015

நானும் வழக்கறிஞர் நானும் வழக்கறிஞர் கரூரில் சுற்றித் திரிந்த போலி வழக்கறிஞர் கைது - வழக்கறிஞர்கள் பிடித்துக் கொடுத்த போலி வழக்கறிஞர்

கரூர் நீதிமன்ற வளாகத்தில் போலி வழக்கறிஞர் கைது – 9 வது மட்டுமே படித்து மற்ற வழக்கறிஞர்களை ஏமாற்றிய வாலிபரால் பரபரப்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகே உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மதுரையை சார்ந்த சரவணன், இவர் 9 வது மட்டுமே படித்த நிலையில்,  இவர் மதுரை ஹை கோர்ட் வழக்கறிஞர் எனவும், கரூர் அரசு கலைக்கல்லூரி முன் அலுவலகம் அமைத்து கடந்த இரு வருடங்களாக கரூரில் பணியாற்றி கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படு
கிறது. நீதிமன்றத்தையும், வழக்கறிஞர்களையும் ஏமாற்றிய இந்த போலி வழக்கறிஞர் சரவணன் தீடீரென காணமல் போனார். காணமல் போன அந்த போலி வழக்கறிஞர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுப்பட்டிருந்ததையும், அவர் வழக்கறிஞரே கிடையாது, 9 வது மட்டுமே படித்ததை மற்ற வழக்கறிஞர்கள் கண்டறிந்து கரூர் வழக்கறிஞர்கள்  சங்கம்  சார்பில் தலைவர் மாரப்பன் தலைமையில் கரூர் பசுபதிபாளையம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு, பின்னர் சரவணன் கைது செய்யப்பட்டார். முற்றிலும் சக வழக்கறிஞர்கள் பிடித்துக் கொடுத்த இந்த வழக்கறிஞரைப் போல் தமிழகம் முழுவதும் உள்ள போலி வழக்கறிஞர்களை கண்டுபிடிக்க காவல் துறை உதவ வேண்டுமென கரூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் அதன் தலைவர் மாரப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து 17 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் அந்த போலி வழக்கறிஞர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் மற்ற வழக்கறிஞர்களிடையே மட்டுமில்லாமல் போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment