சீனாவில் நடைபெற்ற சர்வதேச சாப்ட் டென்னிஸ்
போட்டியில்
கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர் வருண் உலக
சாதனை படைத்துள்ளார்
கரூர்,
ஜூலை 25. சீனாவில் அண்மையில் நடைபெற்ற “14 வது
சீன கோப்பை சர்வதேச
சாப்ட் டென்னிஸ்” போட்டியில் கரூர் பரணி பார்க் பள்ளி ஒன்பதாம்
வகுப்பு மாணவர் P.K.வருண் வெண்கலப் பதக்கம் பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச
போட்டியில் வெண்கலம் வென்று உலக சாதனை படைத்து, இதன் மூலம் கரூர் மாவட்டத்திற்கும், பள்ளிக்கும், மட்டுமல்லாது தமிழகத்திற்கே பெருமை
சேர்த்த மாணவர் P.K.வருணிற்கு பள்ளியில் பாராட்டுவிழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில், சாதனை மாணவர் P.K.வருணை பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் S.மோகனரெங்கன், செயலர் திருமதி.பத்மாவதி
மோகனரெங்கன் பள்ளியின் முதன்மை முதல்வர் டாக்டர். C.ராமசுப்ரமணியன்,
பள்ளியின் நிர்வாக அலுவலர் M.சுரேஷ், பரணி பார்க் பள்ளி முதல்வர் K.சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி, குமாரசாமி கல்வியியல் கல்லூரி
முதல்வர் சாந்தி, துணை முதல்வர்கள் நவீன் குமார், சரஸ்வதி, உடற்கல்வி ஆசிரியர்கள்,
மாணவர்கள், பெற்றோர் பாராட்டி வாழ்த்தினர்.
புகைப்படம்:
சைனாவில்
நடைபெற்ற சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்று உலக சாதனை படைத்த கரூர்
பரணிபார்க் மாணவர் பி.கே.வருணைப் கரூர் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன்,
முதன்மை முதல்வர் டாக்டர். சி.ராமசுப்ரமணியன், ஆசிரியர்கள் பாராட்டுகிறார்கள்.
No comments:
Post a Comment