Friday 17 July 2015

ஆடி முதல் நாளை வரவேற்ற சுடுதேங்காய் நிகழ்ச்சி கரூர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் அமராவதி, காவிரி ஆற்றுக்கரை ஓரங்களில் குவிந்த பெண்கள்

தமிழ் மாதமான ஆடி மாதம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஆன்மீக அன்பர்கள் மற்றும் பக்தர்களுக்கு விஷேசம் தான் என்றால் மிகையாகாது. ஆடி பட்டம் தேடி விதைக்கனும் என்பதை போல இம்மாதம் தான் விவசாயிகள் ஏராளமான பயிர்கள், நெல் மற்றும் வாழை ஆகியவனவற்றைகளை விதைப்பார்கள். அதே போல தான் தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களிலும் விஷேசம். மேலும் ஆடி மாதம் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை தொடங்கியது இன்னும் விஷேசம் ஆகும். இதே போல் ஆடி மாதம் முதல் நாளன்று தமிழகத்தில் கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றங்கரை ஓரங்களில் தேங்காய் சுடும் விஷேச நிகழ்ச்சி நடைபெறும். இந்த நாளில் தேங்காயை மேல் பகுதியை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தடவி தேங்காயின் மூன்று கண்களில் ஒரு கண்ணில் மட்டும் துளையிட்டு, அதில் உள்ள தேங்காய் நீரை வேறு கிண்ணத்தில் எடுத்து வைத்து, பிறகு ஊறவைத்த பச்சரசி, நாட்டுச்சக்கரை, பொட்டுக்கடலை, எள் மற்றும் வறுத்த பாசிப்பருப்பு, தேங்காய் நீரை ஆகியவனவற்றை நன்கு சுமாராக அரைத்து பிறகு அதை துளையிட்ட தேங்காயில் நுழைத்து பிறகு அந்த தேங்காயை பூவரசம் மரம் அல்லது வாதனாம்மரம் ஆகிய மரத்தின் குச்சியால் (ஏனென்றால் அவைகள் மட்டுமே கசக்காது) குத்தி பின்பு நெருப்பில் சுட்டு தமிழ் மக்கள் ஆடியை கொண்டாடுகின்றனர். இந்த சம்பவம் ஆண்டாண்டு காலம் நடைபெறுவது கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. இதே போல் ஆடி மாதம் பிறந்த தினமான இன்று இந்த வகையான தேங்காய்களை  கரூர் படிக்கட்டு துறையில் உள்ள அமராவதி ஆற்றின் கரைகளில் குவிந்த பெண்கள் மற்றும் ஆண்கள் தேங்காய்களை குச்சியில் சொறுகி அந்த தேங்காய்களை நன்கு தீயில் வாட்டுகின்றனர். பின்பு இந்த நெருப்பில் வாட்டப்பட்ட தேங்காய்களை ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து சொந்தம் பந்தத்தினர் ஒன்று கூடி அங்கிருக்கும் விநாயகர் கோயிலில் வைத்து படைத்து பின்பு வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இதே போல கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, காவிரி ஆற்றங்கரையோரமும், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே போல நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்கள் ஆடி மாதத்தை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சி ஊர்க் கூடி தேர் இழுத்தது போல சுமார் 5 மணியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி இரவு 9 மணி வரை நடைபெற்றது.
பேட்டி : சாந்தி – அமராவதி ஆற்றங்கரையோரப் பெண்மணி

       லெட்சுமி – அப்பகுதி வாழ் பெண் மணி

No comments:

Post a Comment