Tuesday 21 July 2015

தமிழ்நாடு காகித ஆலை தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொண்டால் ஒட்டு மொத்த விவசாயிகளை திரட்டி தமிழக அரசின் காகித ஆலையின் பெயரை கலங்கடிப்போம் – கரூரில் தமிழக அரசின் காகித ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆவேசம்

தமிழ்நாடு காகித ஆலை தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொண்டால் ஒட்டு மொத்த விவசாயிகளை திரட்டி தமிழக அரசின் காகித ஆலையின் பெயரை கலங்கடிப்போம் – கரூரில் தமிழக அரசின் காகித ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆவேசம்
சாயப்பட்டறை முதலாளிகளால் முதலில் பாதிக்கப்பட்டோம் – பிறகு தமிழ்நாடு அரசின் காகித ஆலை நிறுவனத்தின் யூக்ளிப்டஸ் பயிர் செய்வதற்கு நிலம் ஒப்படைத்ததால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளோம் – புலம்பும் கரூர் மாவட்ட விவசாயிகள்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, கரூர் தொகுதி, கிருஷ்ணராயபுரம் தொகுதி என மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டது என்றால் முதலில் சாயக்கழிவு நீரும், மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது தான் என்றால் மிகையாகாது. இது ஒரு புறம் இருக்க அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம் பாளையம் அருகே உள்ள தமிழக அரசின் காகித ஆலைக்கு சப்ளை செய்யப்படும் யூக்ளிப்டஸ் என்ற மரத்தை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நாமத்தை சாட்டும் விதமாக அந்த தமிழக அரசு நிறுவனம் தற்போது செயல்பட்டு வருவதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
கரூர் அருகே உள்ள நொய்யல் வாய்க்கால் ஆற்றுப்பாசன விவசாயிகள் கடந்த 18 வருடமாக திருப்பூரிலிருந்து வரும் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்டு அங்கு பயிரிடப்பட்ட மஞ்சள், கரும்பு, நெல், கடலை உள்ளிட்ட பயிர் வகைகளும், தென்னை மரங்களும் முற்றிலும் அழிந்தது. இதைக் கண்டித்து முதலில் 1998 ல் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டனர். கண்டன ஊர்வலம், ஆர்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் உள்ளிட்ட அறவழிப்போராட்டங்களை நடத்தினர். நொய்யல் பாசன விவசாயிகள் நலச்சங்கம் என்ற பெயரில் துவங்கப்பட்டு நீதிமன்றம் மூலமாக நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல வழக்குகளுக்கு பிறகு ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை சாய ஆலை முதலாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றமும், டில்லி உச்சநீதிமன்றமும் உத்திரவிட்டதோடு, உரிய நஷ்ட ஈடு வழங்கவும் உத்திரவிட்டது. இந்நிலையில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் உள்ளடக்கிய 28 ஆயிரத்து 596 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை இழப்பீட்டு ஆணையத்தை உச்சநீதிமன்றம் நியமித்தது. ஆனால் இழப்பீட்டு ஆணையம் பெயரளவில் அதாவது யானைப்பசிக்கு சோளப்பொறி என்ற அளவில் இழப்பீட்டு ஆணையம் வழங்கியது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்னையில் நிலுவையில் உள்ளது. இது புறம் இருக்க கரூர் காகித புரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனமானது தன்னை 1982 ஆம் ஆண்டு துவக்கியது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கப்பட்ட இந்த கம்பெனிக்கு ஏராளமானோர் நிலம் கொடுத்து உதவியுள்ளனர். அந்த நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு வேலை தருவதாகவும், உரிய பாதுகாப்பு செய்து தருவதாகவும் உத்திரவு அளித்ததையடுத்து தங்களுடைய நிலத்தை இப்பகுதி விவசாயிகள் அளித்தனர். ஆனால் உரிய தகுதியை காகித ஆலை மீறியுள்ளது என்றும் நிலம் கொடுத்த எங்களுக்கும், எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வேலை வேண்டும் என ஒரு பிரிவும், வேலை தற்காலிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை நிரந்தரமாக்க வேண்டுமென ஒரு பிரிவு போராடி வரும் நிலையில், மற்றோரு பிரிவினர் காகித ஆலைக்கு தேவைப்படும் மூலப்பொருட்களான யூக்ளிப்டஸ் மரத்தை நட சுமார் 6 வருடம் அக்ரிமெண்ட் போட்டு, பிறகு 1 வருடத்திற்கு 4 ஆயிரம் வீதம் வழங்க ஒப்பந்தம் செய்து, அந்த ஒப்பந்தத்தை தற்போது மாற்றும் விதமாகவும், தற்போது சுமார் 400 விவசாயிகளை ஏமாற்றி வருகிறது என்று காகித ஆலைக்கு நிலத்தை யூக்ளிப்டஸ் மரம் வளர்க்க ஒப்பந்தம் செய்தவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். இதையடுத்து கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதையடுத்து கரூர் கோட்டாட்சியர் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தில் சுமூக தீர்வு கிடைக்காத நிலையில் பல்வேறு விவசாயிகள் ஒன்றினைந்து தமிழக அளவில் திரட்டி கரூர் புகளூர் காகித ஆலை முன்பு பல்வேறு போராட்டங்களில் ஈடுபவதோடு, அரசின் காகித ஆலையின் பெயரை அவமானப்படுத்துவதே பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருமித்த கருத்தாகும் என தெரிவித்தார்.

பேட்டி : நொய்யல் எம்.இராமசாமி – நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்

 

No comments:

Post a Comment