கரூர்
நகரின் முன்னாள் நகரமன்ற உறுப்பினரும், விளையாட்டு வீரருமான வைரபெருமாள் அவரது புகழை பறைசாட்டும் வகையில் அவரது
சார்பாக நினைவு புறா பந்தயப்போட்டி ஆண்டு தோறும் கரூரில் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில்
அமரர் வைரப்பெருமாள் நினைவு 46 ஆம் ஆண்டு புறா போட்டிகள் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில்
துவங்கியது.இதில்
கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 35க்கும் மேற்பட்ட புறாக்கள் கலந்து
கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு புறாவும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து 6 மணிநேரம் பறந்து
குறிபிட்ட இடத்தில் அமரவேண்டும் என்ற விதியில் கீழ் நடைபெற்று வருகிறது, மேலும் சாதாபுறாவின்
கண்கள் மஞ்சள் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும்,உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளது.தொடர்ந்து மூன்று நாட்களிலும்
அதிக நேரம் பறக்கும் புறாக்களுக்கு பரிசுகள் வழங்கபடும் என்று போட்டியின் அமைப்பாளர்கள்
தெரிவித்தனர்.கர்ணபுறாக்கள் போட்டி ஆகஸ்ட் மாதம் 14,15,16 ஆகிய தேதிகளில் நடைபெறபோவதாகவும்
இதன் பரிசளிப்பு விழாவில் வேறொரு நாளில் வழங்கபடுவதாக போட்டியின் அமைப்பாளர் நெடுஞ்செழியன்
தெரிவித்தார். தமிழகத்தின் பாரம்பரியமான தூது விடுவதற்கும், சமாதானத்தை நினைவூட்டும்
வகையில் நடைபெற்ற இந்த புறா போட்டி கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாட்டும்
வகையில் இருந்தது.
பேட்டி
– நெடுஞ்செழியன் - போட்டியின் அமைப்பாளர்
No comments:
Post a Comment