கொழும்பு: உலக அளவில் இனப்படுகொலையை நடத்தி அப்பாவி தமிழர்களைக் கொன்ற இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் இந்திய ரூபாயில் ரூ18.8 கோடிக்கு காலை உணவை சாப்பிட்டதாக இலங்கை முன்னாள் எம்.பி நலீன் பண்டாரவை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி பரபரப்பை கிளப்பிவிட்டது. இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதனால் தற்போது ராஜபக்சே இலங்கை ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக அடிபடுகிறார்.. இந்த வகையில் 'sinhayanews' என்ற சிங்கள இணையதளம் 'ராஜபக்சே குடும்பத்தின் காலை உணவு செலவு ரூ94 மில்லியன்' என்ற தலைப்பில் இலங்கை முன்னாள் எம்.பி நலீன் பண்டாரவை மேற்கோள்காட்டி பகீர் செய்தி வெளியிட பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஆதாரமாக ஹில்டன் ஹோட்டல் கொடுத்த 'பில்' ஒன்றும் வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த பணத்தை ராஜபக்சே குடும்பம் செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஊடகம் ஆதாரமாக வெளியிட்டிருப்பது "காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற 15.11.2013ஆம் நாளன்று காலை உணவுக்கான கொட்டேஷன் தான் என்றும் 11.11.2013ஆம் தேதி அது அனுப்பி வைக்கப்பட்டது என்றும் ராஜபக்சே தரப்பினர் கூறி பரபரப்பை ஓய வைத்துள்ளனர். ராஜபக்சே அன் கோவுக்கு எல்லாமே இனி 'ஓயாத அலைகள்'தான்!. அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பது பழமொழி ஆனால் அப்பாவித் தமிழர்களின் இறப்புக்கு காரணமான ராஜபக்ஷே இன்னும் என்ன விதமான புகார்களுக்கு சிக்குகிறாரோ ! வாழ்க தமிழ் !! வாழ்க தமிழர்கள் !!!!
No comments:
Post a Comment