Thursday 30 July 2015

மறைந்தாலும் அவர் புதைக்கப்பட வில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார் – மக்களிடையே வை.கோ சொல்ல வந்த உண்மை, வாட்ஸ் அப்பில் உலா வரும் புகைப்படங்கள், வார்த்தைகள், ஒரு கடைகள் கூட உடைக்கப்பட விலலை. பஸ் கண்ணாடி உடைக்கப்பட வில்லை. ஒரு உண்மை இந்தியனாக ஒரு சல்யூட்







தமிழர்களின் விடியல், மக்களின் குடியரசுத் தலைவர், டாக்டர் அப்துல் கலாம் மறைந்ததை அனுசரிக்கும் பொருட்டு தமிழகம், கர்நாடகம், கேரளா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஒரு புறம் மத்திய, மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் அமைச்சர்கள், பாரத பிரத மந்திரி உள்ளிட்டோர் ஏராளமனோர் கலந்து கொண்டு கடந்த மூன்று நாட்களாக அங்கேயே இருந்து அனுசரிப்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள். தமிழக அளவில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இறந்தது போல் தமிழகமே ஸ்தம்பித்தது என்றால் அது மிகையாகாது, செருப்பு தைப்பவர்கள் முதல் செல்போன் ரிப்பேர் செய்பவர்கள், மொபைல் ரீசார்ஜ் செய்பவர்கள், மருந்து விற்பனையாளர்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள், லாரி ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள் என டாஸ்மாக் கூட விடுமுறை விட்டு அனுசரிப்பு நிகழ்த்தினர். இதில் வை.கோ வின் பங்கு ஏராளம், மறைந்த மக்களின் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைவையடுத்து கடந்த மூன்று நாட்களாக இராமேஸ்வரத்திலேயே இருந்து கட்சி பணிகளை பார்க்காமல் பெயருக்காக உழைக்காமல், விளம்பரத்திற்காக பாராமல் உண்மையான தமிழரும், குழந்தைகளின் கதாநாயகனும், விஞ்ஞானியும் மறைந்து விட்டாரே என்று கேமிரா பக்கம் கூட தலை காட்டாமல் அவர், அவர் வேலையை செய்து வந்த நிலையில்,  பாரத பிரதமர் மோடி இராமேஸ்வரத்திற்கு வந்து இறுதி சடங்கிற்கு பங்கேற்ற போது, டாக்டர் அப்துல்கலாமின் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தாரை அறிமுகப்படுத்தினார். அதில் அவருக்கு மிகையில்லாத அளவு திருப்தி, மேலும் அவர் மலர் அஞ்சலி செலுத்தும் போது செருப்பை கழட்டு விட்டு, பிறகே அஞ்சலியும், மேலும் கடைசி அஞ்சலி செலுத்தும் போது செருப்பை கழட்டி விட்டு முறையாக அஞ்சலி செலுத்தினார். இத்தகைய மாண்பு யாருக்கும் வராது, இது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் டாக்டர் அப்துல் கலாம் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி புகழாஞ்சலி செலுத்தினார்கள். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி மறைந்த மக்களின் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இது ஒரு புறம் இருக்க வாட்ஸ் அப்பில் மாணவ கண்மணிகள் கண்களில் தண்ணீர் பெருக்கெடுத்த ஓடிய நிலையில் அதில் அப்துல் கலாம் தோன்றுவதை போல காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் இதனிடையே
நிற் "கலாம்"
நடக் "கலாம்"
உடுக் "கலாம்"
உறங் "கலாம்" என . . .
இருக் "கலாம் "
என்றிருந்த இந்தியனை . . .
விழிக் "கலாம் "
என தட்டி எழுப்பி இனி . . .
உழைக் "கலாம்"
சிந்திக் "கலாம்"
பறக் "கலாம் "
ஜெயிக் "கலாம் "
சாதிக் "கலாம் "
எனச்சொன்னவர் . . .
""அன்புமிகு அப்துல் கலாம்!""
என்ற வரிகள் அற்புதம், எது எப்படியோ, ஒரு கட்சி தலைவர் போல அல்லாமல் மக்களின் தலைவர் போல நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒரு பஸ் கண்ணாடி உடைய வில்லை. பொதுமக்களை யாரும் கட்டாய படுத்தி கடையை மூட சொல்ல வில்லை. தனியார் பேருந்துகளை யாரும் கட்டாய படுத்தி ஓட விடவில்லை. இறுதி அஞ்சலியை கூட அமைதியாக செலுத்திய மக்களுக்கு இந்தியனாக மனமாற வாழ்த்துகிறேன் அனைவரையும்,

No comments:

Post a Comment