முன்னாள் குடியரசுத்தலைவரும்,
அணுசக்தி விஞ்ஞானியுமான மேதகு அப்துல் கலாம் அவர்கள் பிரிவை நாடு மட்டுமில்லாமல் உலக
அளவில் அவரது பிரிவை விட்டு மீளாமல் பல்வேறு அரசியல் கட்சிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் பரணி பார்க் பள்ளி குழுமங்கள் சார்பில் அவருக்கு மலர் மாலை அணிவித்து
அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மறைந்த
முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைவையொட்டி கரூர் பரணி
பார்க் பள்ளி, பரணி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் மொளன அஞ்சலி செலுத்தி அவரது புகழை
எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் பரணி பார்க் பள்ளி குழுமங்களின் தலைவர் மோகனரெங்கன்,
செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், முதன்மை முதல்வர்
இராம சுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்து
கொண்டனர்.
இதே போல முன்னாள் ஜனாதிபதி
டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின்
மறைவையொட்டி அன்னை மகளிர்
கல்லூரி
மற்றும்
ஸ்ரீ
அரபிந்தோ நர்சிங் கல்லூரியின்
சார்பில்
அவரது
உருவப்
படத்திற்கு
மலரஞ்சலி செலுத்தும்
நிகழ்ச்சி
கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அன்னை மகளிர்
கல்லூரி முதல்வர்
(பொறுப்பு) டாக்டர்
மாரிச்சாமி, ஸ்ரீ அரபிந்தோ நர்சிங்
கல்லூரி
முதல்வர்
ஏஞ்சலினா, அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி
அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
ஏ.ஆர்.மலையப்பசாமி, உறுப்பினர்
பிடி கோச். ப.தங்கராசு, தாளாளர்
கந்தசாமி இரு கல்லூரியின் பேராசிரியர்கள் அலுவலக
பணியாளர்கள்
மற்றும்
மாணவ மாணவிகள்
கலந்து
கொண்டு
மவுன
அஞ்சலி
மற்றும்
மலரஞ்சலி
செலுத்தினர்.
இதே போல கரூர் அருகே உள்ள வெண்ணைமலை
சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளி நிர்வாகி பாண்டியன் தலைமையில் முதல்வர்
பழநியப்பன் முன்னிலையில் ஏராளமான மாணவ, மாணவிகள் அப்துல் கலாம் படத்திற்கு மலர் அஞ்சலி
செலுத்தினர். மேலும் இதற்கான முழு ஏற்பாடுகளை சேரன் பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக
செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டு அப்துல்
கலாம் புகழஞ்சலி செலுத்தினர்
No comments:
Post a Comment