கரூர் பரணி கல்விக் குழும மாணாக்கர்களுக்கு ஐ.ஐ.டி. உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்வு பரணி கல்வி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கரூர்
பரணி கல்வி குழும தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை தாங்கினார். மேலும்
பள்ளிக்குழுமங்களின் செயலாளர் பத்மாவதி மோகனரங்கன், குரோத் அகாடமி 'ஐ.ஐ.டி. பயிற்சி மையம்' இயக்குனர் கவிதா ராமசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பேசிய குரோத் அகாடமி நிறுவனரும், பரணி கல்விக் குழும முதன்மை முதல்வருமான சொ.ராமசுப்ரமணியன், "கரூரில் புதிய முன்முயற்சியாக பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில், குரோத் அகாடமி ஐ.ஐ.டி. பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் "+1, +2 பாடத்திட்டத்துடன்
ஒருங்கிணைந்த ஐ.ஐ.டி. பயிற்சி" வழங்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் கரூர் பகுதியில் இருந்து ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர்கல்வியகங்களில் நிறைய மாணவர்கள் சேர்ந்து சாதனை புரிவார்கள். அதற்காகத் தான் இப்பயிற்சி நடத்தப்படுகிறது," என்று சொ.ராமசுப்ரமணியன் கூறினார்.
இதில் புதுதில்லி ஐ.ஐ.டி. கணிதத் துறைத் தலைவர் பேரா.எஸ். தர்மராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது
"உலகத்தரம் வாய்ந்த ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உயர் கல்வி நிறுவனங்களுக்கு +2 முடித்த பிறகு, நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழ் வழிப் பள்ளியில் திருநெல்வேலியில் ஒரு கிராமத்தில் படித்த என்னால் இன்று புதுதில்லி ஐ.ஐ.டி. உயர் கல்வி நிறுவன துறைத்தலைவராக வர முடிந்ததற்குக் காரணம் எனது பள்ளி ஆசிரியர்கள் ஊட்டிய நம்பிக்கையே ஆகும். ஸ்டேட் போர்டு பாடத் திட்டத்தில் படிக்கும் மானவர்களாக இருந்தாலும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் வெற்றி பெற இயலும். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆண்டுக்கு முப்பது லட்சம் முதல் ஒரு கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். +1, +2 அடிப்படை கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து படித்தால் தற்போது மாநில பாடத்திட்டத்தில்
எழுபது சதவீதம் பெற்று கொண்டிருக்கும் மாணவர்களே இத்தேர்வில் எளிதில் தேர்ச்சி அடைந்து விடுவார்கள். ஐ.ஐ.டி. தேர்வு நோக்கில் தொடர்ந்து பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம்" , இவ்வாறு பேசினார்.
பின்னர் மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பரணி கல்வி குழும முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், அனைத்து +1, +2 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாக அலுவலர் எம். சுரேஷ் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
No comments:
Post a Comment