கரூரில் தமிழ்நாடு
பிராமணர் சங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் கல்வியில்
சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கரூர் பி.எல்.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத் தலைவர் ஸ்ரீதரன் அனைவரையும் வரவேற்றார். விழாவில்
பிராமணர் சங்க மாநில தலைவர் திருவொற்றியூர் என்.நாராயணன் மாணவ, மாணவிகளுக்கு பரிசு
மற்றும் சான்றிதழ்கள், ஊக்கத் தொகை ஆகியவனவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார். கரூர்
மாவட்ட செயலாளர் ஆடிட்டர் பி.ஆர்.மகாதேவன் சங்க செயல்பாடுகளை பற்றி விளக்கினார். நெரூர்
ஸ்ரீ வித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் உரையாற்றிய போது, குழந்தைகள் நல்ல ஒழுக்க சீடர்களாக
நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து சிறப்படைய வேண்டும் என்றார். துணைத் தலைவர் ஸ்ரீ
சங்கர நாராயணன், காந்திகிராமம் சங்க தலைவர் ஆனந்தநாராயணன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர்
சி.வினோத்குமார், மாவட்டச் செயலாளர் வெங்கடேஷன், இளைஞரணிச் செயலாளர் வாங்கல் லெட்சுமிநாராயணன்,
மகளிரணி செயலாளர் ஹேமா, மாவட்டப் பொருளாளர் சி.லெட்சுமி நாராயணன், சாராதா ராஜசேகரன்,
மகாதானபுரம் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஹெச்.வீரமணி நன்றி கூற விழா இனிதாக
முடிவுற்றது.
No comments:
Post a Comment