Saturday 18 July 2015

கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக அடர்ந்த வனப்பகுதியில் தியானம் செய்து வந்த சாமியார் வனத்துறையினரிடம் பிடிப்பட்டார். எச்சரிக்கை பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டார்

 நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் அரிய வகை மூலிகைகளை நிறைந்தது. இந்த கொல்லிமலையில் சித்தர்கள் வாழ்ந்து வந்தாக வரலாறுகள் கூறிக்கின்றனர். இந்த மலையில் சித்தர்கள் வாழ்ந்த நூற்றுக்கணக்கான குகைகள் உள்ளன.  நாடு முழுவதும் உள்ள சாமியார்கள் கொல்லிமலைக்கு வந்து சித்தர்கள் வாழ்ந்து வந்ததாக கூறிப்படும்
குகைகளில் தியானம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொல்லிமலையில் உள்ள சோளக்காட்டில் உள்ள தமிழக வனத்துறையினருக்கு சொந்தமான மூலிகை பண்னைத்
தோட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆட்கள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறையினருக்கு

தகவல் வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு போது அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பாறைகள் இடையே உள்ள குகையில் காவி உடை உடைத்திய ஒருவர் தியான செய்துக் கொண்டு இருந்தது தெரியவந்தது. இத்தொடர்ந்து அந்த சாமியாரை பிடித்த வனத்துறையினர் கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளி வாகன பரிசோதனை  சாவடிக்கு அழைத்து வந்தது விசாரனை மேற்கொண்டனர். அப்போது அவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு மடத்தின் பெயரை சொல்லி, அங்கிருந்து வந்துள்ளதாக கூறினார். கொல்லிமலை அமைதியான இடம் என்பதால் இங்கு தவம் இருப்பதாகவும், இது போல பல ஊர்களுக்கு சென்றுவந்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து வனத்துறையினர் முன் அனுமதி பெறாமல் வனப்பகுதிக்குள் வரக்கூடாது என்றும் எச்சரித்து ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment