Saturday 11 July 2015

இந்திய அரசியல் வரலாற்றையே திருப்பி பார்க்க வைக்கும் பா.ம.க வின் கொங்கு மண்டல மாநாட்டிற்கு அனைவரும் வந்து பூரண மதுவிலக்கு கொண்டு வந்து மது மற்றும் புகையிலா மாநிலமாக்க தமிழர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் அறிக்கை

கோவையில் 12-ந் தேதி நடைபெறும் பா.ம.க. அரசியல் மாநாட்டிற்கு அலை கடலென திரண்டு வாருங்கள் என கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக, பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் விடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
இந்திய அளவில் அரசியலில் பா.ம.க. அதன் எண்ணற்ற மைல்கற்களை கடந்து வந்திருக்கிறது. அவற்றின் தொடர்ச்சியாக பா.ம.க. அதன் அடுத்த மைல்கல்லை வரும் 12-ம் தேதி கொங்கு நாட்டின் தலைநகரான கோவையில் கடக்கவிருக்கிறது.
 

பிப்ரவரி 15-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற ‘‘2016 ஆட்சி மாற்றத்திற்கான மாபெரும் அரசியல் மாநாட்டில்’’ பா.ம.க.வின் முதல்-அமைச்சர் பதவிக்கான வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார். ஆட்சி மாற்றத்தை நோக்கி அப்போது தொடங்கிய பா.ம.க.வின் பயணம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
 

தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், கோவில்பட்டி ஆகிய 6 இடங்களில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மது ஒழிப்பு போராட்டங்களில் பங்கேற்ற மகளிர் கூட்டம், வரும் தேர்தலில் ஒட்டுமொத்த மகளிர் சமுதாயத்தின் ஆதரவும் பா.ம.க.வுக்கு தான் என்பதை உணர்த்துவதாக இருந்தது. இதுவரை அவர் பங்கேற்ற 13 பொதுக்கூட்டங்களுக்கு கிடைத்த ஆதரவு இதை உறுதி செய்திருக்கிறது.
 

தென் மாவட்டங்களில் நடந்த போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு திரண்டு வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன், தென் மாவட்டங்களில் பா.ம.க. எங்கே? எனக் கேட்டவர்கள் ஓடி ஒளிந்தனர். சேலம் மாநாட்டைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் மே 17-ம் தேதி நடந்த சோழ மண்டல பா.ம.க. அரசியல் மாநாடு நமது வலிமையை இந்த உலகுக்கு எடுத்துக் கூறியது.
 

மாபெரும் கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளின் மாநில மாநாடுகளை விட நமது மண்டல மாநாடு மிக பிரம்மாண்டமாக நடந்தேறியது. சேலம் மாநாட்டை சோழ மண்டல மாநாடு விஞ்சியது, சோழ மண்டல மாநாட்டை கொங்கு மண்டல மாநாடு விஞ்சும் என்ற அளவுக்கு இந்த மாநாட்டுக்கான திடல் மக்கள் கூட்டத்தால் நிறையும், கொங்கு மண்டலத்தில் நமது வலிமை என்ன என்பதை நாட்டுக்கு விளக்கும் வகையில் முரசு அறையும், பா.ம.க.வுக்கு வடக்கு மற்றும் வட மேற்கு மாவட்டங்களைத் தாண்டி பா.ம.க.வுக்கு செல்வாக்கு இல்லை என்று பிதற்றியவர்களின் குரல் இம்மாநாட்டுடன் மறையும்.
 

கோயம்புத்தூருக்கு தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரம் தான் ஐரோப்பாவில் நடந்த தொழில் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தது. அதேபோல் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ஆதரவாக நடைபெறவுள்ள மக்கள் புரட்சியில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் முக்கியப்பங்கு வகிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இன்னும் 9 மாதங்களில் நடைபெறவுள்ள அந்த ஜனநாயகப் புரட்சிக்கு அடிக்கல் நாட்டுவது தான் கொங்கு மண்டல அரசியல் மாநாட்டின் முதன்மை நோக்கமாக இருக்கும்.

கொங்கு தலைநகரம் மனிதத் தலைகளாக காட்சியளித்தது... பா.ம.க.வை வெற்றி பெறச்செய்து கோட்டைக்கு அனுப்ப கொங்கு நாட்டு மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்பதை அனைவருக் கும் உணர்த்தும் வகையில் அலைகடலாய் திரண்டு வந்து ஆட்சி மாற்றத்திற்கான கொங்கு மண்டல பா.ம.க. அரசியல் மாநாட்டை சிறப்பிக்குமாறு பாட்டாளி சொந்தங்களை அழைக்கிறேன்.
 

இவ்வாறு அந்த கடிதத்தில் பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் கூறியுள்ளார்.
 


No comments:

Post a Comment