கேரளா மாநிலத்தில்
உள்ள கொச்சின், எர்ணா குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தில் உள்ள
நாமக்கல் கோழிப்பண்ணைக்கு இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள்
தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அளவில்
தமிழகத்தில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் நிறைய உள்ளன. இந்த கோழிப்பண்ணைகளுக்கு
தேவையான தீவனத்திற்கு முக்கிய மூலப்பொருளான இறைச்சிக் கழிவுகள் அதிகம் தேவைப்படுவதால்
முதலாளிகள் சம்பாதிப்பதற்காக அண்டைய மாநிலமான கேரளா மாநிலத்தில் இருந்து கொச்சின்,
எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்,
மாடு, ஆடு உள்ளிட்ட இறைச்சிகளில் இருந்த மீதமுள்ள கழிவுப்பொருட்களை கரூர் வழியாக நாமக்கல்
மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நொய்யல் குறுக்குச்சாலை வழியாக
இறைச்சியில் துறுநாற்றத்தை அறிந்தும், அதிலிருந்து விழும் கழிவு நீரானது ரோட்டில் கொட்டுவதை
அறிந்த மக்கள் அந்த லாரி, வேன் என சுமார் 5 வாகனம் சிறைபிடிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம்
குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில் இந்த கழிவு இறைச்சியை கொண்டு செல்வதால்
வீட்டில் குடியிருக்க முடிய வில்லை, மேலும் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, தோல் நோய்கள்
ஏற்படுவதன் மூலம், இந்த கழிவு இறைச்சியிலிருந்து கொட்டப்படும் கழிவு நீரிலிருந்து அதிகரிக்கும்
ஈக்களினால் நாங்கள் கடந்த இரு மாதங்களாக சிரமப்பட்டிருக்கிறோம் என்றனர். மேலும் கேரள
அரசு இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.
பேட்டி : முகேஸ்குமார்
– நொய்யல் – கரூர் மாவட்டம்
No comments:
Post a Comment