Wednesday 15 July 2015

கரூவூர் தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த தினவிழா

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகே காமராஜரின் 113 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. கரூர் காமராஜர் சிலை அருகே நடைபெற்ற இந்த விழாவில் கரூவூர் தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் ஓய்வு பெற்ற ஆசிரியர் காமராசு, பி.டி.தங்கராஜ், து.ர.பெரியதம்பி, லயன் சித்தேஸ்வரன், ராஜேந்திரகிருஷ்ணன், க.ப.பாலசுப்பிரமணியன், இந்தியன் வங்கி பாலகிருஷ்ணன், கருவை வேணு, தனபால், பாவலர் கல்யாண சுந்தரம், க.ந.சதாசிவம், நன்செய்ப்புகழூர் அழகரசனார், அன்பு ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு கல்விக் கண் திறந்த காமராஜரின் புகழை எடுத்துரைத்தனர். மேலும் அவரது புகழை கவி பாடினார்கள். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூவூர் தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

No comments:

Post a Comment