திண்டுக்கல்
மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்தவர் பாக்கியராஜ் (45) இவர் தனது நண்பருடன் இருசக்கர
வாகனத்தில் கரூருக்கு மருந்து வாங்க வந்துள்ளார். அப்போது கரூர் – திண்டுக்கல் சாலை வெள்ளியனை அருகேயுள்ள
செல்லாண்டிப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது நல்ல ஐ.எஸ்.ஐ முத்திரை
குத்தப்பட்ட ஹெல்மெட் அணிந்து வந்த போது., அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே
பாக்கியராஜ் உயிரிழந்துள்ளார். இவரது நண்பர் பலத்த காயங்களுடன் கரூரில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அறிந்த வெள்ளியணை
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்த பாக்கியராஜின் உடலை பிரேதபரிசோதனைக்காக கரூர்
அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஜீலை 1ம் தேதி முதல் தலைகவசம் கட்டாயம்
அணிவது சட்டமாக்கப்பட்டாளும் போலி தலைகவசத்தினால் இதுபோன்ற வாகன விபத்துக்கள் தொடவதும்
அதில் உயிர்கள் இழப்பதும் சகஜமாக உள்ளது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலியானவர் அணிந்து வந்த ஹெல்மெட் சுக்கு நூறானது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment