Wednesday 8 July 2015

புரோட்டா பிரியர்களே உஷார் ! மைதா உணவுக்கு மயங்காதீங்க!!

கோதுமையிலிருந்தும், மரவள்ளிக் கிழங்கிலிருந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த முழுகோதுமை, மாவாக அரைக்கப்படும். இந்த மாவு இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை வெண்மையாக்க, 'பென்சாயில் குளோரைடு" என்ற வேதிப் பொருளும், மிருதுவாக்க 'அலாக்சன்' என்ற வேதிப் பொருளும் சேர்க்கப்படுகின்றன. அதன்பின்தான் மைதா மாவு கடைகளில் விற்பனைக்கு வருகிறது. 
மாவில் உள்ள புரோட்டினுடன், இந்த வேதிப் பொருட்கள் சேரும்போது, நம் கணையத்தில் உள்ள 'பீட்டா' செல்கள் அழிக்கப்பட்டு நீரழிவு நோய் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 
பர்கர், சமோசா, கேக், பிட்சா, நூடுல்ஸ், பரோட்டா, ஃபாஸ்ட் ஃபுட், பேக்கரி வகைகள் என பெரும்பான்மையான எல்லாவற்றிலுமே மைதான்தான் மூலப் பொருள். 
இந்த உணவுகளை அடிக்கடி, அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். மேலும், ஜீரண உறுப்புகள் படிப்படியாக செயலிழக்கும் அபாயமும் உள்ளதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.
இனி, ரோட்டோர பரோட்டாக் கடைக்கு.... டாட்டா சொல்லிடுவீங்கதானேபார்த்துங்க உஷார்.



No comments:

Post a Comment