Thursday, 23 July 2015

அன்றைக்கு காந்தி கையில் ரூபாய் நோட்டில்லை., இன்றைக்கு காந்திபடம் இல்லாமல் ரூபாய் நோட்டு இல்லை – கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மனிதத்தேனியின் சிந்தனைப் பேச்சு

அன்றைக்கு காந்தி கையில் ரூபாய் நோட்டில்லை., இன்றைக்கு காந்திபடம் இல்லாமல் ரூபாய் நோட்டு இல்லை – கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மனிதத்தேனியின் சிந்தனைப் பேச்சு

கரூர் வெண்ணைமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சேரன் பள்ளிகளின் ஆலோசகர் கல்வியாளர் பி.செல்வதுரை தலைமை தாங்கினார். பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும்  12 வகுப்புகளில் சிறந்த தேர்ச்சியை பெற்றுத்தந்த 85 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தங்க நாணயம் மற்றும் விருதுகளை வழங்கி தாளாளர் லயன் பி.எம்.கே.பாண்டியன் வாழ்த்துரைத்தார். மேலும் இப்பள்ளியின் முதல்வர் வி.பழநியப்பன் தன்னுடைய வரவேற்புரையில் தங்களுடைய பள்ளி ஆங்கில வழிக் கல்வி போதிக்கின்ற பள்ளியாக இருந்தாலும், தாய் மொழியாக இருக்கும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம், மாநில அளவில் தமிழில் முதலிடம் பெற்ற வரலாறும் இப்பள்ளிக்கு உண்டு, மாவட்ட அளவில் பல்வேறு அமைப்புகள் நடத்தும், பேச்சு, கட்டுரை, ஒப்பித்தல் போட்டிகளில் பல பரிசுகளை எமது பள்ளி மாணவர்கள் பெற்று வருவதும், குறிப்பிடத்தக்கதாகும் என தெரிவித்து மகிழ்ந்தார். விழாவில் தமிழ் இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றிய மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தலைவர் மனிதத்தேனி இரா.சொக்கலிங்கம் தமிழின் இனிமை என்ற தன்னுடைய உறையில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க மாணவர்களையும், கற்பித்தலில் சிறந்து விளங்கி தங்கக்காசுகளை பரிசாக பெற்ற ஆசிரியர்களையும், மனதார பாராட்டினார். உலகில் எத்தனையோ பல ஆண்டு வரலாறு கொண்ட மொழிகள் இன்றைக்கு பேச்சு மொழியாக இல்லாமல் அழிந்து போய் இருக்கிறது. இந்த மொழிகளை உயிர்பிப்பதற்காக பல கோடி ரூபாய்களை மத்திய அரசு செலவளிக்கிறது. பல நீதி நெறிகளை இலக்கியங்களாக தந்த சமஸ்கிருதம் இன்றைக்கு பேச்சு மொழியாக இல்லை. யூத மொழி இன்றைக்கு பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழி அதன் இனிமை, இலக்கிய வளம் கொண்ட தமிழ் மொழி நம்மால் மட்டும் அல்ல, பிற மொழியை தாய் மொழியாக கொண்ட தேசப்பிதா அண்ணல் காந்தி, தந்தை பெரியார், சி.யு.போப் போன்றவர்களாலும் விரும்பப்பட்ட மொழியாகும், தேசப்பிதா அண்ணல் காந்தி வாழ்ந்த காலத்தில் அவருடைய கையில் ரூபாய் நோட்டுகள் அவ்வளவாக இல்லை. ஆனால் இன்றைக்கு காந்தியின் படம் இல்லாத ரூபாய் நோட்டுகளே இல்லை எனவே, வாழ்வில் மாற்றங்களும் நல்ல எண்ணங்களுமே வாழ்வை உயர்த்தும், இலக்கியங்கள் நீதி நெறிகளை பண்பாட்டை கலாச்சாரத்தை வாழ்வின் வெற்றி இலக்கை நமக்கு காட்டும் காலக்கண்ணாடிகளாகும். இலக்கியங்களை நேசித்து வாசித்து, தமிழின் இனிமையை ரசிப்போமாக என்று உரையை முடித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்விக்குழு ஆர்.இ.சி.சுப்பிரமணியன், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன், புன்னம் சத்திரம் பள்ளி கல்விக்குழு ஆலோசகர் குணசேகரன், அன்பு ஆறுமுகம், துணை முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment