Tuesday 14 July 2015

கரூர் மாவட்டத்தில் முறைகேடாக மணல் கொள்ளையோடு, கிரஷர் குவாரிகள் கொள்ளையும் எந்த ஒரு கட்சியும் கண்டு கொள்ளாத நிலையில் பா.ஜ.க தீவிரம் - மாவட்ட நிர்வாகம் கிரஷர் குவாரிகளையும், கிரஷர் ஜல்லி ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளையும் கண்காணிக்க வேண்டும் – கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் பகிரங்க தீர்மானம்

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் க.பரமத்தி கொங்கு வளநாடு திருமண மன்றத்தில் மாவட்டத்தலைவர் கே.சிவசாமி தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் பி.பெரியசாமி கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மாநிலத் துணை தலைவரும், கோட்டப் பொருப்பாளருமான பொறியாளர் எம்.சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் மாவட்டத்தலைவர் சிவசாமி தொண்டர்களிடையே கூறும் போது தமிழகத்தில் ஆண்ட, மற்றும் ஆளுங்கட்சியினால் மது தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. இதை நமது தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சுட்டிக் காட்டி வருவதோடு, அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மற்ற கட்சியினரிடையே மட்டுமில்லாமல் பொதுமக்களிடையேயும் இத்தகைய செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளில் பள்ளி சிறுவர், கல்லூரி மாணவர்களுக்கு மது விற்றால் அந்த மது விற்றக் கடையை கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்,  தேசம், தெய்வம், தர்மம் காக்க பாரதீய ஜனதா கட்சியை தமிழக மக்கள் நேசித்து அதில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். இதை நாம் எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் கரத்தை வழுப்படுத்துவதோடு, கரூர் மாவட்டத்தில் மேலும் பாரதீய ஜனதா கட்சியில் உறுப்பினர்களை சேர்த்து கரூர் மாவட்டத்தை தமிழகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் இக்கூட்டத்தில் கரூர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்று உயர் நிலைப்பால பணி கடந்த பல வருடங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியை வேகப்படுத்தி சீக்கிரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும், தாமதமாகும் பட்சத்தில் கரூர் நகராட்சிக்கு எதிராக பல்வேறு ஆர்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் (கிரஷர்) பல முறைகேடுகளுக்கு இடையில் இயங்கி வருகிறது. மேலும் ஜல்லி கொண்டு செல்லும் வாகனங்கள் 40 டன்களுக்கு அதிகமாக பாரம் ஏற்றிசெல்கிற காரணத்தினால் சாலைகள் சீக்கிரமாக பழுது ஏற்படுகின்றது. எனவே குவாரிகளையும், பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணித்து சரி செய்ய வேண்ட்டும். இல்லாத பட்சத்தில் மைன்ஸ் அதிகாரிகள் அலுவலகங்களை முற்றுகையிடுவது என இந்த செயற்குழு முடிவு செய்கின்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பாலை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனைத்து பாலையும் கொள்முதல் செய்து, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் காப்பாற்றுமாறு இந்த செயற்குழு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கரூர் காவிரி ஆற்றில் இருந்து மணல் கொள்ளை மிக சுதந்திரமாக அதிகாரிகள் துணையுடன் நடைபெற்று வருகிறது. இதைத் தட்டிக் கேட்கும் நபர்களை குண்டர்களை வைத்து தாக்குவதும், அவர்கள் மீது காவல் துறையை ஏவி விட்டு பொய் வழக்கு போடுவதும் சகஜமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த நிலையை மாநில அரசுக்கு எடுத்து செல்ல வேண்டும் என இந்த செயற்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மணல் கொள்ளையும், கல் குவாரியான கிரஷர் தொழில்களை சட்ட விரோதமாக  குண்டர்களை வைத்து நூதனமாக கனிம வளப் பொருட்களை கொள்ளையடித்து வருவதை கரூரில் தான் அதிகம் அதை மாவட்ட நிர்வாகம் தட்டிக்கேட்காமல் தட்டிக் கேட்பவர்கள் மீது சட்டம் பாய்ந்த நிலையை அரசுக்கு நூதனமாக சுட்டிக் காட்டிய கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் செயலுக்கு சமூக சேவகர்கள் மற்றும் பொதுநல விரும்பிகளும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

No comments:

Post a Comment