21-07-15 கரூர்
பூமியின் இன்றைய முக்கிய செய்திகள்
1)பட்டா இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமை ஆக்க கோரி பி.ஆர்.பி நிறுவனத்தின் மீது முந்தைய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தொடர்ந்த இரு வழக்குகளின் வாய்தா தேதியை ஆகஸ்ட் 11ம் தேதிக்கும், மற்ற 33 நிறுவனங்களின் மீது தொடர்நத வழக்குகளின் வாய்தா தேதியை செப்டம்பர் 8ம் தேதிக்கும் மேலூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ஒத்தி வைத்தார்
2) உடல்நிலைப் பற்றி விமர்சித்ததாக, சு.,சாமி மீது ஜெ., அவதூறு வழக்கு
3) 1,200 அரசுப் பள்ளிகளை மூடப்போவதாக வெளியான தகவல் தவறானது : பள்ளிக்கல்வித் துறை
4) நக்கீரன் கோபால் ,காமராஜ் இருவர் மீதும் மானநஷ்டவழக்கு அடுத்த மாதம் 28ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டது .ஜெயலலிதா உடல்நலம் குறித்து அவதூறு வெளியிட்டதற்காக
5) தமிழக அமைச்சர் எடப்பாடி அமைச்சர் பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகிகள் ஆகியோர் வரும் ஆகஸ்ட் 21 ந்தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்ப உத்தரவு...
6) நம் பாதுகாப்புத் துறையை மேம்படுத்தும் வகையில், ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் 200 சாப்பர் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கத் மத்திய அரசு திட்டம்
7) தேனி போடிநாய்க்கனூர் பகுதியில் இருந்து கஞ்சாவை பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற கருப்பய்யாவை பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் கைது செய்து 6கிலோ கஞ்சாவயும் பறிமுதல் செய்தனர்.
8) பாபநாசம் அருகே சேர்வலாறு ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பாளையங்கோட்டை மணக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த அக்பர் என்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி விக்கிரமசிங்கபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குடும்பத்துடன் வந்த குளித்த போது ஆற்றில் திடீரென தண்ணீர் அதிகரித்ததால் வாலிபர் பலியானதாக தகவல்.
9) திருப்பூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் சாதி மத வேறு பாடற்ற சமுதாயம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் 200 க்கு மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் களத்தில் கொண்டனர்
10) சேலம் பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளப்பட்டி காவ்லநிளையத்தின் முன் காவலர்கள் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவலர் ஒருவரது வாகனம் காணவில்லை. திருடப்பட்டதா அல்லது மாற்றி எடுத்துச்செல்லப்பட்டதா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
11) லாரிகளில் மாடுகளை ஏற்றி செல்லும் லாரிகளை பிடித்து மாடுகளை கோசாலையில் அடைப்பதை கண்டித்து தமிழகம் முழுவதிலும் இம்மாதம் 19ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மாட்டு சந்தைகள் செயல்படாது என மாட்டு வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.இதை தொடர்ந்நு பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் குடும்பத்தில் உள்ள பெண்கள் இன்று பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள நீதி கல்லில் மிளகாய் அரைத்து வழிபாடு.
12) பழனியில் கொடூரகொலை பரபரப்பு திண்டுக்கல்லிருந்து மோப்பநாய் லிண்டா வரவழைக்கபட்டு தீவிர சோதனை கைரேகை நிபுனர்கள் தடய்யியல்நிபுனர்கள் ஆய்வு டி் எஸ் பி சண்மகசுந்தரம் தலைமை தனிப்படை கொலையாளியை தேடி வருகின்றனர் பழனி கோதைமங்கலம் பெரும்பாறையில் இன்று காலை மணிகண்டன் கொத்தனார் கழுத்தை அறுத்து படுகொலை பயங்கர கொடூர கொலை பற்றி வழக்கு பதிவு செய்து பழனி தாலூகா காவல்துறையினர் தீவிர விசாரனை
13) பழனி கோதைமங்கலம் பெரும்பாறையில் இன்று காலை மணிகண்டன் கொத்தனார் கழுத்தை அறுத்து படுகொலை பயங்கர கொடூர கொலை பற்றி வழக்கு பதிவு செய்து பழனி தாலூகா காவல்துறையினர் தீவிர விசாரனை
No comments:
Post a Comment