சென்னை :இந்தியாவில், எச்.ஐ.வி., பாதிப்பை முதலில் கண்டறிந்த, பிரபல டாக்டர் சுனிதி சாலமன், 75, காலமானார்.சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் டாக்டர் சுனிதி சாலமன். சென்னை மருத்துவக் கல்லுாரியில், நுண்ணுயிரியல் துறை பேராசிரியராக பணியாற்றியவர்.
1986ல், பாலியல் தொழிலாளர்களுக்கு, எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளதை கண்டறிந்து, இந்த நோய் பாதிப்பு இந்தியாவில் உள்ளதை உறுதி செய்தார்.அதன்பின், எச்.ஐ.வி., நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் ஒய்.ஆர்.ஜி., என்ற, சிகிச்சை மையத்தை நடத்தி வந்தார்; நேற்று அதிகாலை அவர் இறந்தார்.சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களும், அவருக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை, அவரது உடல் தகனம் செயயப்பட்டது.
இவரது கணவர் விக்டர் சாமலன், பிரபல இதயநோய் நிபுணர். இவர்களுக்கு, சுனில் சுகாஷ் சாலமன் என்ற மகன் உள்ளார். தி.மு.க., ஆட்சியின் போது, சுனிதி சாலமன், மாநில திட்டக் கமிஷன் உறுப்பினராக இருந்தார்.

No comments:
Post a Comment