Monday 27 July 2015

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் பதவி மற்றும் அ.தி.மு.க வின் கரூர் மாவட்ட செயலாளர் வி.செந்தில்பாலாஜி பதவி பறிப்பு – கோயிலின் ஆகம விதிகளை மாறி வித்யாச யாக பூஜைகள் மற்றும் அவர் தம்பியின் அராஜகமே என்கின்றனர் பொதுமக்கள்

2011ஆம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றவர் செந்தில் பாலாஜி. யாரும் அசைக்க முடியாத வகையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக போக்குவரத்துறை அமைச்சராகவும் இருந்து வந்தார்ஒரு சில பத்திரிக்கையாளர்களுக்கு செல்லப்பிள்ளையாகவும், அவர்கள் சொல்லும் பேச்சுப்படி செயல்கள் பல செய்து ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாகவும் செந்தில் பாலாஜி  இருந்து வந்தார்.

மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து கைது செய்யப்பட்ட போதும் ஒரு சில நிருபர்கள் ஆட்டத்தின் கீழ் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பெயரும் பெற்றார். அப்போதே முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்குள்ளான செந்தில்பாலாஜி, கோயிலின் ஆகம விதிகளை மாறி மாறி, அதாவது வேண்டுமென்றே அம்மா விடுதலையாக கூடாது என்ற நோக்கத்தில் பெருமாள் கோயிலுக்கு வேப்பிலை தீர்த்தம், (துளசி தீர்த்தத்திற்கு பதில்), மாரியம்மன் கோயிலுக்கு காவடி (அதாவது முருகன் கோயிலுக்கு பதிலாக) என எடுத்து பல்வேறு தரப்பட்ட ஆன்மீக அன்பர்களின் எதிர்ப்பை பெற்றவர். இந்நிலையில் ஜெயலலிதா முதல்வர் ஆக வேண்டி என்றால் இது போல அராஜக செயல்களில் ஈடுபட மாட்டார்களே என உண்மை அ.தி.மு.க தொண்டர்களும், உண்மை பத்திரிக்கையாளர்களும் சுட்டிக்காட்டி வந்தனர். இந்நிலையில் கடைசியாக சிவன் கோயிலை சிவ பக்தர்கள் வரவிடாமல் தடுத்து அம்மா கோயிலாக மாற்றினார்.
ஏற்கனவே சிவ பக்தனை அவமானப்படுத்திய யானையை எறிபத்த நாயனார் என்ற உண்மை சிவ பக்தர் கோடாரி என்னும் மலுவை வைத்து யானையின் துதிக்கையை வெட்டினார் என்பது பண்டைய கால உண்மைச்சம்பவம் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலுக்கு உண்டு. அப்படி பட்ட சிவன் கோயிலில்  சொத்துக் குவிப்பு  வழக்கில்  இருந்து  ஜெயலலிதா  விடுதலை  பெற  வேண்டும் என்று  செந்தில்  பாலாஜி  பெரிய  யாகமே  நடத்தினார்.  அம்மன் கோயிலில் அங்கபிரதட்சணம் செய்து அமர்க்களப்படுத்தியதோடு, அம்மன் கோயிலில் காவடியும் எடுத்தார். ஓபிஎஸ்-க்கு பின் செந்தில் பாலாஜிதான் என்று அதிமுகவினரே பேசி வந்தனர். செய்தியாளர்களுக்கு தந்த மாமுலுக்கு ஏற்றவாறு அவர்கள் சொன்னபடியே ஆடினார். ஆடாத ஆட்டம் ஒரு நாள் நிலைக்கு நிற்கும் இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக செய்தி போட்டாலும், சரி ஆனால் அமைச்சரின் செய்தி பற்றி போட்டால் உடனே கேபிளை கட் செய்த கரூர் எம்.எஸ்.ஓ வை சேர்ந்த ஜெயம் மூர்த்தி, அதாவது அமைச்சரின் டி.வி யான ஜெயம் டி.வி யை சார்ந்தவர். அம்மாவிற்கு ஜெயா டி.வி இருக்கும் போது அமைச்சருக்கு ஜெயம் டி.வி இருக்ககூடாதா ? என போட்டி போட்டு சேனலை திறந்து வைத்து, அதன் மூலம் வானவில், சிட்டி ஆகிய டி.விகளை திறந்ததோடு அவற்றிற்கு பணம் கொடுக்காமல் அவரின் வழக்கமான அதற்கும் ஐ.பி கொடுத்து அரசையும் அ.தி.மு.க வையும் ஏமாற்றியவர். மேலும் அமைச்சருக்கு உண்மை விசுவாசி ஏனென்றால் இவரின் பெயர் சந்திரசேகர் அரசுக்கு ஐ.பி கொடுத்ததால் ஜெயம் மூர்த்தி என அ.தி.மு.க வையே இன்று வரை ஏமாற்றி வருகிறார். இது ஒரு புறம் இருக்க முன்னாள் கலெக்டர் ஷோபனா எப்போதுமே அமைச்சரின் தம்பி அசோக்கிடமே இருக்குமாம். அமைச்சர் எது சொன்னாலும் பரவாயில்லை அமைச்சர் தம்பி அசோக் எதுவும் என்னை சொல்லக் கூடாது என இருந்தது. அவ்வப்போது என்ன நாட்டாமை தம்பி பசுபதி கெடுத்துட்டாரா ? என அவ்வப்போது வாட்ஸ் அப் மற்றும் முக நூலில் வலம் வந்தன. ஆனால் அது நாட்டாமை என்பது அமைச்சர் செந்தில்பாலாஜியையும், அவரது தம்பி அசோக்கை வைத்து உண்மையான தி.மு.க வினர் பரப்பி வந்தனர். கட்டபஞ்சாயது நில அபகரிப்பு என அசோக்கிற்கு பல குற்றங்கள் எழும்பின. இந்நிலையில் மெட்ரோ ரெயிலில் கூட இவர் கலந்து கொள்ளவில்லை எனென்றால் இந்த பதவி பறிப்பு என்பது கடந்த 10 நாட்களுக்கு முன்னர் எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை கலந்து கொள்ள கூடாது என அரசு தர்ப்பில் உத்திரவு பிறப்பித்திருந்ததாம். இந்நிலையில் தமிழக  போக்குவரத்துத்துறை  அமைச்சர்  பதவியில்  இருந்து  செந்தில் பாலாஜியை  முதல்வர்  ஜெயலலிதா  இன்று (27-07-15)  அதிரடியாக  நீக்கியுள்ளார்.

முதல்வர்  ஜெயலலிதாவின்  பரிந்துரையை  ஏற்று  ஆளுநர்  ரோசையா  இந்த  உத்தரவை  பிறப்பித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுநர், நடத்துநர்களை நியமித்ததால் அவர்களுக்கும், சிவனடியார்களுக்கும், உண்மையான அ.தி.மு.க தொண்டர்களும், கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இதையடுத்து இவரின் அமைச்சர் பதவியை பறித்ததையடுத்து மாதம் ரூ 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணம் பெற்று வந்த நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் நாளிதழ்களுக்கு ரூ 1 லட்சம் முதல் சுமார் 5 லட்சம் வரை பெற்று வந்த நிறுவனங்கள் ஏமாற்றத்தோடு இருந்து வருகின்றனர். இதை தொடர்ந்து அதிரடியாக கரூரில் உள்ள அமைச்சரின் சேனல்களும், அதாவது ஜெயா டி.வி க்கு போட்டியாக துவங்கிய சேனல்கள் முடக்கப் பட உள்ளதாக தகவல் தெரிந்துள்ளது. எது எப்படியோ எறிபத்த நாயனார் உண்மையில் உயிருடன் இருப்பதாகவும், கரூர் மாரியம்மன் உண்மையாக இருப்பதாகவும் ஆன்மீக அன்பர்கள் மற்றும் சிவனடியார்கள் கூறி வருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ உப்பு திண்ணவும் தண்ணீர் குடித்துதான் ஆகனும், என்பது பழமொழி அதற்கு ஏற்றாற் போல் இது நடந்துள்ளது..

பேட்டி : நவநீத கிருஷ்ணன் – சமூக ஆர்வலர்


No comments:

Post a Comment