Monday, 6 July 2015

அங்காடிகளுக்கு நல்ல தமிழ் பெயர் வைப்போமே ! கரூவூரில் நடைபெற்ற தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பில் உறுதி

கடைகளுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் ! கரூவூர் தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பு வேண்டுகோள் !
கரூவூர் தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பு கலந்துரையாடல் கூட்டம் கடந்த 5 ம் தேதி மாலை கரூர் நகரத்தார் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
பி.டி. கோச் தங்கராசு இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார். முனைவர் கடவூர் மணிமாறன், து.ரா.பெரியதம்பி முன்னிலை உரையாற்றினார். காமராசு வரவேற்புரையாற்றினர். மேலை-பழநியப்பன் நோக்கங்கள் குறித்து விளக்கினார்.
இக்கூட்டத்தில் குழந்தைகள், கடைகள், வணிக நிறுவனங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது., பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது, நகராட்சி சாலைகளுக்கு தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் பெயர்களைச் சூட்ட வேண்டுகோள் விடுப்பது. தொலைக்காட்சிகளில் நல்ல தமிழ் உச்சரிப்பாளர்களை நியமிக்கவும், நேயர்களுடான கலந்துரையாடல்களை தமிழில் நடத்தவும் வேண்டுகோள் விடுப்பது, திருக்குறள் விளக்கவுரை  நூல்களை மலிவு விலையில் அச்சிட்டு பரவலாக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கவிஞர் கரூவூர் கன்னல், நன்செய்ப்புகழூர் அழகரசன், ப.எழில்வாணன், சே.அன்பு, அன்பு ஆறுமுகம், புலவர் மு.குழந்தை, பாவலர் கல்யாண சுந்தரம், க.ந.சாதாசிவம், தனபாலன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment