Thursday 16 July 2015

திண்டுக்கல் அருகே திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்களால் பரபரப்பு

கொடைக்கானலில் பாதாளச் சாக்கடைக் கழிவினால் நிலச்சரிவு ஏற்பட்டு கடை சரிந்து விழுந்தது. கொடைக்கானல் நகராட்சி நகர்மன்றத் தலைவரை பொதுமக்கள் முற்றுகை.




மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள அண்ணா நகர் பகுதியில் பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படாத நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுகாதாரக் கேட்டினால் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்க்கு மாற்றக் கோரியும் பல்வேறு மனுக்களையும் நகராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பல்வேறு மனுக்களை அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்த பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் கழிவு நீரானது சரிவர பராமரிக்கபடாத குழாய்களினால் சாலையின் கீழே உடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீரானது ஆங்காங்கே சிதறி ஓடியதால் அருகே உள்ள கடையின் கீழே அரிப்புகள் ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்தப் பகுதியில் களில் என்பவரின் கடை சரிவில் சிக்கி கீழே உள்ள வீட்டின் மேல் உடைந்து விழுந்தது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தினைபார்வைஇட வந்த கொடைக்கானல் நகராட்சிதலைவர் ஸ்ரீதரை கல்லறை மேடு பொதுமக்கள்முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அந்த பகுதியில் 110 உணவு விடுதிகளின்சார்பாக தனியாரால் அமைக்கப்பட்டுள்ளகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவரபராமரிக்கப்படாமல் ,உள்ளதாகவும் அதனால்பாதாள சாக்கடைக்குள் செல்ல வேண்டிய கழிவுநீர், கசிந்து நிலத்தடி மண்சரிந்து இந்த கடைஇடிந்துள்ளதாகவும் குற்றம் சாட்டிவாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படாத காரணத்தினால் இதே போல் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயமும், அந்தப் பகுதியில் உள்ள சுமார் 5000 குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தகழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பிரச்சினைகுறித்து நகர்மன்ற தலைவர் ஸ்ரீதரிடம் கேட்டதற்கு144 கோடி செலவில் நகராட்சி சார்பாக புதியகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், அதிவிரைவில்இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும்தெரிவித்தார்.

No comments:

Post a Comment