அ.தி.மு.க அமைச்சர்
உத்திரவா ? நீதிமன்ற சட்டமா ? குழப்பத்தில் கரூர் நகராட்சி துறையினர் – கரூரில் பரபரப்பு
கரூர் நகராட்சிக்குட்பட்ட
பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரே தி.மு.க நகர செயலாளர் எஸ்.பி.கனகராஜின் மனைவி பெயரில்
செயல்படும் உணவகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தநிலையில் நகராட்சியானது அதன் வாடகை
தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் வழக்கு
முடியும் வரை கடையை அகற்றவோ, கடைக்கு எவ்வித இடையூறோ செய்யக்கூடாது என்று நீதிமன்றம்
கூறியுள்ள நிலையில் இந்நிலையில் நேற்று (03-07-15) மாலை
அ.தி.மு.க அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள கரூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த உணவகத்தை நீதிமன்ற ஆணையினை மீறி ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளதாகவும், அதை அளக்க வந்துள்ளனர். இதை கேள்விப்பட்ட கரூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வரவும், அங்கிருந்த அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். இதனால் கரூர் டூ திருச்சி நெடுஞ்சாலையானது சற்று நேரம் போக்குவரத்து பாதித்ததோடு அந்த பகுதி பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் தி.மு.க வின் வழக்கை மீறி நீதியை நிலை நாட்ட வீதிக்கு வந்து போராடுவோம் என தி.மு.க மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ் கூறினார். சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்ற பழமொழிக்கு ஏற்றவாறு,. ஏற்கனவே தி.மு.க நிர்வாகிகள் அதிர்ப்தியில் உள்ளனர். என்றும் எந்த வித நடவடிக்கையும் மத்திய மாநில அரசை கண்டித்து மட்டுமே கோஷங்கள் போடுவதாகவும், கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், கரூர் அமைச்சரை கண்டித்து எந்த வித போராட்டங்களையும் நடத்தப்போவதில்லை என்று அகங்காரத்துடன் கூறிக் கொண்டிருந்த அ.தி.மு.க வினர் மத்தியில் திடீரென தி.மு.க வினரின் இந்த சூடுபிடிக்கும் செயலால் 2016 சட்டமன்ற தேர்தலின் ஒத்திகைப் போலவே இருந்தது என்கின்றனர் பொதுமக்கள். மேலும் இனி ஒவ்வொரு வழக்கையும் சட்டபூர்வமாக சந்திப்போம் என வழக்கறிஞர் மணிராஜ் கூறியதையடுத்து தி.மு.க வினர் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது.
பேட்டி : வழக்கறிஞர்
மணிராஜ் – தி.மு.க மாநில சட்டத்துறை இணைச் செயலாளர்
No comments:
Post a Comment