Friday 24 July 2015

குட்டி யானை மீது மோதி ஆம்னி பேருந்து விபத்து

கரூர் அருகே ஆம்னி பேருந்து மினி சரக்குந்து (டாடா ஏஸ்) மீது மோதி விபத்து – இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி – 21 பேர் படுகாயம்

என்னங்க குட்டி யானைன்னா உண்மையான யானைன்னு நினைச்சிங்களா ! அது தான் யானையை ஏற்றும் திறம் படைத்த டாடா ஏஸ் மீது மோதி, ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது பற்றி பார்ப்போம் . பெங்களூருவில் இருந்து கரூர் வழியாக மதுரை நோக்கி சென்ற தனியார் சொகுசு ஆம்னி பேருந்து , கரூர் அருகே உள்ள நாணப்பரப்பு இன்று  வந்து கொண்டிருந்தது. அப்போது வேலூரில் இருந்து கரூரை நோக்கி வந்த டாடா ஏஸ் என்னும் மினி சரக்குந்து மீது மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த மதுரையை சார்ந்த ரோஜர் பின்னி (வயது 33) என்பவரும், டாடா ஏஸ் என்னும் வாகனத்தில் பயணம் செய்த கரூர் வெங்கமேடு புதுப்பிள்ளையார் கோயில் தெருவைச் சார்ந்த மூர்த்தி (வயது 20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இச்சம்பவத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் பலியான இருவரது உடல்களும் கரூர் மற்றும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில். பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தினால் காஷ்மீர் டூ கன்னியாகுமாரி தேசிய நெடுஞ்சாலை எண் 7 ல் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


No comments:

Post a Comment