செட்டிநாட்டரசர்
பத்மஸ்ரீ ராஜாசர் முத்தையா செட்டியார் அவர்களின் 111 வது பிறந்தநாளையொட்டி ராஜாசர்
முத்தையா செட்டியார் பெயரால் ஆண்டு தோறும் வழங்கப்படும் சிறப்பு விருது இவ்வாண்டு பல்துறை
வித்தகரும், கலைக் காவலரும், சிற்றிதழ்களின் புரவலரும், நாட்டுக் கோட்டை நகரத்தார்களின்
நட்பு நாயகனும், படைப்பாளருமாகிய பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியாருக்கு வழங்குவது
என தேர்வு செய்யப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி
வழங்கப்பட இருக்கும் இவ்விருதால், விருதும், வழங்கும் செட்டிநாட்டரசர் எம்.ஏ.எம்.இராமசாமி
அவர்களும் பெருமை பெருகிறார்கள். 1905 ல் அவதரித்து அளப்பரிய தமிழ்ப் பணி, இசைப்பணி,
கல்விப்பணி, இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், மொழிப்போர் தடயம், இசை நூல் வெளியீடுகள்,
இயல், இசை, நாடகம் போற்றியமை, அரசியல், தொழில், அண்ணாமலை மன்றம், மதுரை தமிழிசை மன்றம்
என பல அணிகலன்களை தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கு சூட்டிய பெருமைமிகு சான்றோராம் ராஜாசார்
பெயரால் அமைந்த விருதினை வழங்கும் குழுவிற்கும், விருது பெறும் நல்லியாருக்கும், கரூர்
தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு, திருக்குறள் பேரவை, சிற்றிதழ் ஆசிரியர் சார்பில் வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment