மதுரையில் ‘தினகரனில்’ 3 அப்பாவி ஊழியர்களை எரித்த சம்பவத்தின் பின்னணியில் அழகிரி வெறியாட்டம் என, தலைப்பு செய்தி போட்டும் ம்ஹூம் இதை விட மாட்டோம் என கண்ணீர் பேட்டியில் கொந்தளித்துவிட்டும், பின்னர் கொஞ்சி குலாவிய கலாநிதி, தயாநிதி சகோதரர்கள் தற்போது, மத்திய அரசை கண்டித்து பத்திரிகை ஊடக உரிமை கூக்குரலை எழுப்பி ஓலமிடுவதும், கத்துவதும் கதறுவதும், சந்தர்ப்பவாதமும் தமிழக பொதுஜனங்களை கடும் ஆத்திரத்தில் தள்ளியுள்ளது!
‘தினகரன்’ தமிழ் நாளிதழ் மதுரை கிளை அலுவலகம் எரிப்பு சம்பவமும் 3 பேர்கள் படுகொலையும் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒலிபரப்பு தொழிலில் கொடி பறப்பது சன்குழுமம். இந்த குழுமத்தில் இருந்து தற்போது தினகரன் நாளிதழ் வெளியாகிறது.
தி.மு.க., முன்னாள் பிரபல பிரமுகர்களில் ஒருவர் சி.பா., ஆதித்தனார். இவரது மருமகன் கே.பி., கந்தசாமி. இவர் தினகரன் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். இவரது மறைவிற்கு பிறகு, குமரன் நிர்வகித்தார். தொடர்ந்து, குமரனிடம் இருந்து அடிமாட்டு விலையை கொடுத்து, அடித்து பிடுங்காத குறையாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேரன் கலாநிதிமாறன் நடத்தும் சன்குழுமம், தினகரன் நாளிதழை இயந்திரங்கள், இடங்கள், ஊழியர்களோடு முழுமையாக கைப்பற்றி, நடத்த தொடங்கியது.
முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு மு.க., அழகிரியா? தளபதி ஸ்டாலினா? என்னும் போட்டி நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இது, அவ்வப்போது தி.மு.க., தலைவர் கருணாநிதி மட்டுமின்றி அவரது ஆசைப்படி அத்தியாவசிய, அவசியம் கருதி பெரிதுபடுத்தப்படும்; சிறிதுபடுத்தப்படும்.
இதனால் யார் லாபம் பெறுவர்? என்ன லாபம் பெறுவர்? என்றெல்லாம் யாரும் கேட்க கூடாது. தமிழகத்தில் அ.தி.மு.க.,வை நேரடியாக எதிர்த்து களம் கண்டுவரும் தி.மு.க.,விற்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டாலோ, ஊழல் கறை படிந்து விட்டாலோ திருவாளர் பொதுஜனங்கள் கவனத்தை திசை திருப்ப கூட இந்த மாய்மாலங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு விடும். இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?னு கத்துகுட்டித்தனமா கேள்வியெல்லாம் கேட்க கூடாது! சாமி!
இப்படித்தான், அன்றொரு நாள்... 2007 மே 9
பத்திரிகை சுதந்திரமும், உரிமையும் காவு போன நாள்!
கருணாநிதியின் அரசியல் வாரிசு இளையமகன் ஸ்டாலினா? மூத்த மகன் அழகிரியா? என ரொம்ப அவசியமான வாதம் திடீரென கட்சியில் எழுந்தது. (இது உள்கட்சி பிரச்னை...ப்பா...னு நீங்க சொன்னா தவறு! )
இந்நிலையில், கலாநிதிமாறன் தலைமையில் இயங்கும் சன் டி.வி.,யில் (குடும்ப சண்டை கூத்தடிச்சு, கும்மியும் அடிச்சுதுங்கோ? சனி யாருக்கு பிடிச்சதோ?) அறிவுப்பூர்வமான கருத்துகணிப்பு ஒன்று அலசி ஆராயப்பட்டது. இதில், அரிய கண்டுபிடிப்பான, மு.க., அழகிரிக்கு மக்கள் ஆதரவு (இவர், அடித்தட்டு மக்களோட நெருங்கி பழகினாத்தானுங்க இருக்கும்?) இல்லை; இல்லைனு அடித்து சொல்லப்பட்டது.
இதையடுத்து, குடும்ப சண்டை வீதிக்கு வந்தது. கருத்து கணிப்பு வெளியிட்டதற்காக, மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் மற்றும் சன் டி.வி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் படுபயங்கர தாக்குதலை அரங்கேற்றினர்.
கத்தி, கப்படா, உருட்டு கட்டை, அரிவாள் சகிதமாக அழகிறி ஆதரவாளர்கள் மதுரை தினகரன் அலுவலகத்தை சூறையாடினர். மேலும் பெட்ரோல் குண்டையும் வாசலில் வீசினர். இதில், 3 ஊழியர்கள் அப்பாவித்தனமாக உயிரை தியாகம் செய்தனர். (இவுங்க குடும்ப சண்டைக்கு சம்பந்தமே இல்லாதவங்களெல்லாம் உயிர் தியாகம் செய்ய வேண்டியதாக இருக்குதேப்பா! இது, மேலும் தொடருமோனு வேற கவலையா இருக்கு! (எதற்கும் பொதுஜனங்களே எப்ப வெளியில வந்தாலும் அண்ணன்&தம்பி மோதல் விவரம் தெரிஞ்சுட்டு வெளியே தலையை காட்டுங்க!)
தினகரன் நாளிதழில் மக்கள் மனசு (அதெல்லாம் டூப்புங்க! முன்கூட்டிய எடிட்டோரியல்ல இப்படித்தான் பொதுஜனம் கமெண்ட் வாங்கணும்னு கண்டிஷனா சொல்லி அனுப்பிடுவாங்க! அப்புறம் எங்க மக்கள் மனசு தொறக்கிறது?) என்னும் தலைப்பில் கருத்து கணிப்பு தினசரி வெளியானது.
தமிழகத்திலேயே அப்போதைய மத்திய அமைச்சர்களிலேயே சிறந்தவர் (ஆமாமாம்..., சன் டி.வி.,க்கு பி.எஸ்.என்.எல்., இணைப்புகளை இழுத்தவர் அல்லவா?) தயாநிதிமாறன்தான். இவர்தான் நம்பர் ஒன் என, எழுதப்பட்டது.
இதில், தேவையில்லாமல் அன்புமணி ராமதாஸ் செல்வாக்கு 2 சதவீதம் என, எழுதி பா.ம.கவையும் வம்புக்கு இழுத்திருந்தனர், கலாநிதிமாறனின் தினகரன் கருத்து கணிப்பு குழுவினர்! இது கருணாநிதியின் கீழ்த்தரமான அரசியல் என, பா.ம.க., தலைவர் ராமதாஸ் கொந்தளித்தார்.
இந்நிலையில், கருணாநிதியின் அரசியல்வாரிசு யார் என்பதற்கு மு.க.ஸ்டாலின் பெயர் அழுத்தமாக பதியப்பட்டது. அழகிரிக்கு 2 சதவீதம் என்றே தகவலை இஷ்டத்திற்கு வளைத்து வெளியிட்டனர், அதிநவீன விஞ்ஞான நிருபர்கள் குழுவினர்!
இந்த செய்தியை படித்ததும் மதுரையில், அழகிரி ஆதரவாளர்கள் அதாவது அடியாட்கள் பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பழங்காநத்தம் உள்பட பல பொது இடங்களில் கூடி தினகரன் நாளிதழை கொளுத்தினர். (ஏப்பா... தி.மு.க., தலைவர் கருணாநிதி வீட்டு முன்னால கொளுத்தி போடறது?)
மேலும், அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், சன் குழும தலைவர் கலாநிதி மாறனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அந்த வழியாக வந்த 7 பேருந்துகள் கல்வீசியும், தீ வைத்தும் (உங்க அப்பன் வீட்டு சொத்தா? என, நடுநிலையாளர்கள் குமுறி கேள்வி எழுப்பினர்) தாக்கப்பட்டது.
இதன் உச்சகட்டமாக, மதுரையில், உத்தங்குடியிலுள்ள சன் டி.வி., அலுவலகம், தினகரன் அலுவலகம் மீது கொலைவெறி கும்பல் புகுந்தது. பல நூறு அடியாட்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்ததால் தினகரன் ஊழியர்கள் வெளியேறி ஓடினர். அப்போது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதையடுத்து, அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. இதில், ஊழியர் கோபி, (28) என்பவர் சம்பவ இடத்திலேலேயே பலியானார். வினோத் (27) மருத்துவமனை செல்லும் வழியில் பலியானார். இவர்கள், சன் டி.வி., கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்த சாதாரண அப்பாவி ஊழியர்கள்!
இவர்களுக்கு, கருணாநிதி வாரிசு அழகிரியா, ஸ்டாலினா? என்பதில் சிறிதும் தொடர்பில்லை! மேலும், சன் டி.வி., காவலாளி முத்துராமலிங்கம் என்பவரும் சம்பவத்தில் உயிரை இழந்தார்.
அப்போதைய மதுரை பெண் மேயர் தேன்மொழி, உருட்டுகட்டையை கையில் எடுத்து கொண்டு ரவுடித்தனத்தோடு போஸ் கொடுத்தார். வீதியில் இறங்கி கலாட்டா செய்தார். இச்சம்பவத்தில் சுதாரித்த போலீசார் முதற்கட்டமாக, விரைந்து சென்று, 25 பேர்களை கைது செய்து, மேலிட உத்தரவுப்படி, ‘கடமை’யாற்றினர்.
சம்பவ இடத்தை பார்வையிட்டு, கலாநிதிமாறன் கண் கலங்கியதும், இதை இத்துடன் விட மாட்டேன் என, அழகிரியை வஞ்சம் கொண்டதும், பிறகு தினகரன் தலைப்பு செய்தியாக கொட்டை எழுத்துகளில், கருத்து கணிப்பை சகித்திட முடியாமல் அழகிரி வெறியாட்டம் தினகரன் 3 ஊழியர்கள் எரிப்பு என, கொளுந்துவிட்டு எரியும் மதுரை தினகரன் அலுவலக வாயிலை படம்பிடித்து போட்டதும், பிறகு ஒரு நல்லநாளில் தாத்தா கருணாநிதி, மூத்த மகன் அழகிரி, பேரன்கள் கலாநிதி, தயாநிதி கூடி போஸ் கொடுத்ததும்... பழசை மறந்து பாடி திரிந்ததும்...
3 அப்பாவி ஊழியர்கள் ஆன்மா மன்னிக்காது!
கரூர் பூமி வாசகர்களே!
‘‘இந்த கதையெல்லாம்தான் எங்களுக்கு தெரிஞ்சதுதானே! எதற்கு இந்த நீண்ட நினைவுகூர்தல்’’
என, நீங்கள் கேட்பது புரிகிறது! அப்பன்&மகன் வாரிசு சண்டையில் பத்திரிகையில் பணியாற்றும் ஊழியர்களை பலிகடா ஆக்கும்போது, தற்போது சன் டி.வி., குழுமத்தின் எப்.எம்., விண்ணப்பங்கள் அனுமதியை மத்திய அரசின் தற்போதைய மறுப்பின்போது எழுப்பும் கூக்குரலும், அலறலும் எங்கே போனது? இது, சன் குழுமத்திற்கும், தி.மு.க.,விற்கும், தலைவர் கருணாநிதிக்கும் அன்று தெரியவில்லையா? ‘தினகரன்’ தமிழ் நாளிதழ் மதுரை கிளை அலுவலகம் எரிப்பு சம்பவமும் 3 பேர்கள் படுகொலையும் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒலிபரப்பு தொழிலில் கொடி பறப்பது சன்குழுமம். இந்த குழுமத்தில் இருந்து தற்போது தினகரன் நாளிதழ் வெளியாகிறது.
தி.மு.க., முன்னாள் பிரபல பிரமுகர்களில் ஒருவர் சி.பா., ஆதித்தனார். இவரது மருமகன் கே.பி., கந்தசாமி. இவர் தினகரன் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். இவரது மறைவிற்கு பிறகு, குமரன் நிர்வகித்தார். தொடர்ந்து, குமரனிடம் இருந்து அடிமாட்டு விலையை கொடுத்து, அடித்து பிடுங்காத குறையாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேரன் கலாநிதிமாறன் நடத்தும் சன்குழுமம், தினகரன் நாளிதழை இயந்திரங்கள், இடங்கள், ஊழியர்களோடு முழுமையாக கைப்பற்றி, நடத்த தொடங்கியது.
முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு மு.க., அழகிரியா? தளபதி ஸ்டாலினா? என்னும் போட்டி நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இது, அவ்வப்போது தி.மு.க., தலைவர் கருணாநிதி மட்டுமின்றி அவரது ஆசைப்படி அத்தியாவசிய, அவசியம் கருதி பெரிதுபடுத்தப்படும்; சிறிதுபடுத்தப்படும்.
இதனால் யார் லாபம் பெறுவர்? என்ன லாபம் பெறுவர்? என்றெல்லாம் யாரும் கேட்க கூடாது. தமிழகத்தில் அ.தி.மு.க.,வை நேரடியாக எதிர்த்து களம் கண்டுவரும் தி.மு.க.,விற்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டாலோ, ஊழல் கறை படிந்து விட்டாலோ திருவாளர் பொதுஜனங்கள் கவனத்தை திசை திருப்ப கூட இந்த மாய்மாலங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு விடும். இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?னு கத்துகுட்டித்தனமா கேள்வியெல்லாம் கேட்க கூடாது! சாமி!
இப்படித்தான், அன்றொரு நாள்... 2007 மே 9
பத்திரிகை சுதந்திரமும், உரிமையும் காவு போன நாள்!
கருணாநிதியின் அரசியல் வாரிசு இளையமகன் ஸ்டாலினா? மூத்த மகன் அழகிரியா? என ரொம்ப அவசியமான வாதம் திடீரென கட்சியில் எழுந்தது. (இது உள்கட்சி பிரச்னை...ப்பா...னு நீங்க சொன்னா தவறு! )
இந்நிலையில், கலாநிதிமாறன் தலைமையில் இயங்கும் சன் டி.வி.,யில் (குடும்ப சண்டை கூத்தடிச்சு, கும்மியும் அடிச்சுதுங்கோ? சனி யாருக்கு பிடிச்சதோ?) அறிவுப்பூர்வமான கருத்துகணிப்பு ஒன்று அலசி ஆராயப்பட்டது. இதில், அரிய கண்டுபிடிப்பான, மு.க., அழகிரிக்கு மக்கள் ஆதரவு (இவர், அடித்தட்டு மக்களோட நெருங்கி பழகினாத்தானுங்க இருக்கும்?) இல்லை; இல்லைனு அடித்து சொல்லப்பட்டது.
இதையடுத்து, குடும்ப சண்டை வீதிக்கு வந்தது. கருத்து கணிப்பு வெளியிட்டதற்காக, மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் மற்றும் சன் டி.வி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் படுபயங்கர தாக்குதலை அரங்கேற்றினர்.
கத்தி, கப்படா, உருட்டு கட்டை, அரிவாள் சகிதமாக அழகிறி ஆதரவாளர்கள் மதுரை தினகரன் அலுவலகத்தை சூறையாடினர். மேலும் பெட்ரோல் குண்டையும் வாசலில் வீசினர். இதில், 3 ஊழியர்கள் அப்பாவித்தனமாக உயிரை தியாகம் செய்தனர். (இவுங்க குடும்ப சண்டைக்கு சம்பந்தமே இல்லாதவங்களெல்லாம் உயிர் தியாகம் செய்ய வேண்டியதாக இருக்குதேப்பா! இது, மேலும் தொடருமோனு வேற கவலையா இருக்கு! (எதற்கும் பொதுஜனங்களே எப்ப வெளியில வந்தாலும் அண்ணன்&தம்பி மோதல் விவரம் தெரிஞ்சுட்டு வெளியே தலையை காட்டுங்க!)
தினகரன் நாளிதழில் மக்கள் மனசு (அதெல்லாம் டூப்புங்க! முன்கூட்டிய எடிட்டோரியல்ல இப்படித்தான் பொதுஜனம் கமெண்ட் வாங்கணும்னு கண்டிஷனா சொல்லி அனுப்பிடுவாங்க! அப்புறம் எங்க மக்கள் மனசு தொறக்கிறது?) என்னும் தலைப்பில் கருத்து கணிப்பு தினசரி வெளியானது.
தமிழகத்திலேயே அப்போதைய மத்திய அமைச்சர்களிலேயே சிறந்தவர் (ஆமாமாம்..., சன் டி.வி.,க்கு பி.எஸ்.என்.எல்., இணைப்புகளை இழுத்தவர் அல்லவா?) தயாநிதிமாறன்தான். இவர்தான் நம்பர் ஒன் என, எழுதப்பட்டது.
இதில், தேவையில்லாமல் அன்புமணி ராமதாஸ் செல்வாக்கு 2 சதவீதம் என, எழுதி பா.ம.கவையும் வம்புக்கு இழுத்திருந்தனர், கலாநிதிமாறனின் தினகரன் கருத்து கணிப்பு குழுவினர்! இது கருணாநிதியின் கீழ்த்தரமான அரசியல் என, பா.ம.க., தலைவர் ராமதாஸ் கொந்தளித்தார்.
இந்நிலையில், கருணாநிதியின் அரசியல்வாரிசு யார் என்பதற்கு மு.க.ஸ்டாலின் பெயர் அழுத்தமாக பதியப்பட்டது. அழகிரிக்கு 2 சதவீதம் என்றே தகவலை இஷ்டத்திற்கு வளைத்து வெளியிட்டனர், அதிநவீன விஞ்ஞான நிருபர்கள் குழுவினர்!
இந்த செய்தியை படித்ததும் மதுரையில், அழகிரி ஆதரவாளர்கள் அதாவது அடியாட்கள் பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பழங்காநத்தம் உள்பட பல பொது இடங்களில் கூடி தினகரன் நாளிதழை கொளுத்தினர். (ஏப்பா... தி.மு.க., தலைவர் கருணாநிதி வீட்டு முன்னால கொளுத்தி போடறது?)
மேலும், அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், சன் குழும தலைவர் கலாநிதி மாறனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அந்த வழியாக வந்த 7 பேருந்துகள் கல்வீசியும், தீ வைத்தும் (உங்க அப்பன் வீட்டு சொத்தா? என, நடுநிலையாளர்கள் குமுறி கேள்வி எழுப்பினர்) தாக்கப்பட்டது.
இதன் உச்சகட்டமாக, மதுரையில், உத்தங்குடியிலுள்ள சன் டி.வி., அலுவலகம், தினகரன் அலுவலகம் மீது கொலைவெறி கும்பல் புகுந்தது. பல நூறு அடியாட்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்ததால் தினகரன் ஊழியர்கள் வெளியேறி ஓடினர். அப்போது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதையடுத்து, அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. இதில், ஊழியர் கோபி, (28) என்பவர் சம்பவ இடத்திலேலேயே பலியானார். வினோத் (27) மருத்துவமனை செல்லும் வழியில் பலியானார். இவர்கள், சன் டி.வி., கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்த சாதாரண அப்பாவி ஊழியர்கள்!
இவர்களுக்கு, கருணாநிதி வாரிசு அழகிரியா, ஸ்டாலினா? என்பதில் சிறிதும் தொடர்பில்லை! மேலும், சன் டி.வி., காவலாளி முத்துராமலிங்கம் என்பவரும் சம்பவத்தில் உயிரை இழந்தார்.
அப்போதைய மதுரை பெண் மேயர் தேன்மொழி, உருட்டுகட்டையை கையில் எடுத்து கொண்டு ரவுடித்தனத்தோடு போஸ் கொடுத்தார். வீதியில் இறங்கி கலாட்டா செய்தார். இச்சம்பவத்தில் சுதாரித்த போலீசார் முதற்கட்டமாக, விரைந்து சென்று, 25 பேர்களை கைது செய்து, மேலிட உத்தரவுப்படி, ‘கடமை’யாற்றினர்.
சம்பவ இடத்தை பார்வையிட்டு, கலாநிதிமாறன் கண் கலங்கியதும், இதை இத்துடன் விட மாட்டேன் என, அழகிரியை வஞ்சம் கொண்டதும், பிறகு தினகரன் தலைப்பு செய்தியாக கொட்டை எழுத்துகளில், கருத்து கணிப்பை சகித்திட முடியாமல் அழகிரி வெறியாட்டம் தினகரன் 3 ஊழியர்கள் எரிப்பு என, கொளுந்துவிட்டு எரியும் மதுரை தினகரன் அலுவலக வாயிலை படம்பிடித்து போட்டதும், பிறகு ஒரு நல்லநாளில் தாத்தா கருணாநிதி, மூத்த மகன் அழகிரி, பேரன்கள் கலாநிதி, தயாநிதி கூடி போஸ் கொடுத்ததும்... பழசை மறந்து பாடி திரிந்ததும்...
3 அப்பாவி ஊழியர்கள் ஆன்மா மன்னிக்காது!
கரூர் பூமி வாசகர்களே!
ஜனநாயகத்தின் குரல்வளை நெரிபடும் அவலம் குரல் எழுப்பிய தி.மு.க., தலைவர் கருணாநிதி, தினகரன் ஊழியர் எரிப்பு சம்பவத்தின்போது வாய் திறவா மவுனியாக ஆனாரே ஏன்? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி! ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் முதல் வைகோ வரை வரிந்து கட்டுவதும் சரியல்ல!
எதற்கு இந்த போலி வேஷம்?
தொழில் நடத்த வந்த இடத்தில் சூழல் தன்மை கருதி வேடத்தை தரித்து கொள்ளும் தாத்தா, பேரன்கள் உறவும், சகோதரர்கள் அழகிரி, ஸ்டாலின் பாசமும் என, அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டுதான் உள்ளனர். இவர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல! சிந்தனை குருடர்கள் அல்ல!
ஒருநாள் சரியான நீதியும், கடுமையான தண்டனையும் தரப்படும்.
அப்போது, தி.மு.க.,வும், கருணாநிதியும், சன்குழுமமும் தப்பவே முடியாது! காலம் சரியான தண்டனையை வழங்க, தக்க தருணத்திற்காக ஓய்வெடுத்து காத்திருக்கிறது!
அது தான் இந்த
தருணம் நிருபர்களின் ஆன்மா சன் டி.வி யை மன்னிக்காது
No comments:
Post a Comment