Thursday, 9 July 2015

டூபாக்கூர் நிருபர்களை மாவட்ட ஆட்சியர் அங்கிகரிக்கீராரா ? மாவட்ட பத்திரிக்கையாளர் கொடுத்த மனு மீதே நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் மக்களின் மனு மீது எப்படி நடவடிக்கை எடுப்பாரா ?

கரூர் மாவட்டத்தில் டூபாக்கூர் நிருபர்களை கட்டுப்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் தனது பஸ்பாஸை திருப்பி கொடுத்தும் பலனில்லை
மனு கொடுத்து ஒரு வாரம் ஆகியும் இன்றும் நடவடிக்கை எடுக்க வில்லை
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம், சாலை வசதி, தெருவிளக்கு, சாக்கடை வசதி, வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான மனுக்கள் வருவதும், அதன் மீது தீர்வு காணப்படுவதும் வழக்கம், இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அலுவலகத்தில், கரூர் மாவட்டத்தில் டூபாக்கூர் நிருபர்கள் ஏராளமானோர் உள்ளனர். என்றும் ஒப்பந்ததாரர் முதல், அரசு வேலை பார்ப்பவர் வரை நிருபர்களாக உள்ளனர் என்றும், பட்டா மாறுதலிலிருந்து பட்டாசுக் கடை உரிமம் வரை நிருபர்கள் தங்களது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்று கரூர் மாவட்ட மூத்தபத்திரிக்கையாளரும், தனியார் தொலைக்காட்சி நிருபருமான சி.ஆனந்தகுமார் அவருக்கு அரசு சார்பில் கடந்த 16 வருடங்களாக வழங்கப்பட்ட அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் வழங்கப்பட்ட பத்திரிக்கையாளருக்கான பஸ் பாஸை திருப்பி மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியிடமே கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார். மேலும் அவர் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
பட்டா மாறுதல் முதல் பட்டாசு லைசன்ஸ் வரை நிருபர்கள் தலையீடு இருப்பதாகவும், காண்ட்ராக்டர் முதல் கவெர்மெண்டில் பணிபுரிபவர்களெல்லாம் நிருபர்கள் என்று உள்ளனர். எனவே உண்மையான நிருபர்களை கண்டறிய மனு இதுவும் அது வரை எனது பஸ் பாஸை திரும்பிக் கொடுக்கிறேன் என மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் .தி.மு. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களும் பத்திரிக்கையாளரே, ஏற்கனவே ஆண்ட முன்னாள் முதல்வரும், தி.மு. கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அவர்களும் பத்திரிக்கையாளரே. ஏன் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்க போராடியவர்களும், இந்தியாவிற்காக பாடுபட்ட பலரும்ம் பத்திரிக்கையாளரே. அப்பெயர் பட்ட புண்ணியம் வாய்ந்த தொழில் பத்திரிக்கையில் பணியாற்றுவது., இவையெல்லாம் சுட்டி காட்டி எனது மனுவை கோரிக்கையாக வைக்கிறேன். மேற்கண்ட முகவரியில் வசிக்கும் நான் கடந்த 1997 ம் ஆண்டு முதல் தினபூமி நாளிதழிலும், மக்கள் தொலைக்காட்சியிலும், தமிழ் ஓசை நாளிதழிலும் நிருபராக பணியாற்றி வந்தேன், தற்போது கரூர் மாவட்ட நிருபராக தனியார் தொலைக்காட்சியில்  உள்ளேன். இந்திய அரசியலமைப்பின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை துறை, கரூர் மாவட்டத்தில் படாதபாடு பட்டு வருகிறது. டூபாக்கூர் நிருபர்கள் ஒரு புறம் மற்ற நிருபர்கள் தனது சுய லாபத்திற்காக பட்டா மாறுதல் முதல் பட்டாசு கடை லைசன்ஸ் வரை நிருபர்கள் தலையீடு இருப்பதால் அரசு தனது வேலையை ஆட்டி வைக்கிறார்கள் நிருபர்கள். மேலும் கரூர் மாவட்டத்தில் தான் காண்ட்ராக்டர் முதல் கவெர்மெண்ட்டில் பணியாற்றுவர்களும், அரசு பள்ளியின் ஆசிரியர்கள் என எல்லோரும் நிருபர்களாக உள்ளனர். இதனால் அரசையே மிரட்டி ஏராளமான பில்டிங் காண்ட்ராக்ட், அரசு அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வது, பள்ளியில் மாணவர்களுக்கு திறம்பட கற்பிக்க முயலாமை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுதான் வருகிறது. காரணம் நானும் ஒரு நிருபர் என மிரட்டல், மேலும் ஒரு நிருபர்கள் கூட்டம் குளித்தலையை மையமாக கொண்டுள்ளது. கரூரில் நிருபர்கள் சுமார் 40 பேர் என்றால் குளித்தலையில் சுமார் 80 நிருபர்கள் காரணம் மணல் குவாரி உள்ளதாம், அதன் மூலம் எங்களுக்கு வருமானம் வரும் என்ற காரணத்தால் இல்லாத பேப்பர் பெயரைக் கொண்டும், தொலைக்காட்சி பெயரைக் கொண்டும் பல டூபாக்கூர் நிருபர்களும், ஒரு சில நல்ல நிருபர்களும் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வதியம் மணல் ரீச் அருகே மணல் லாரி மோதி வாலிபர் ஒருவர் பலியானார். அந்த விபத்தை செய்தி எடுக்காமல் அந்த ரீச்சை முற்றுகையிட உள்ளனர் என தெரிந்து அங்கே சென்று சுமார் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் தலா ரூ ஆயிரம் பெற்று வந்துள்ளார். பிணந்திண்ணி கழுகுகள் கூட சற்று நாகரீகமாக இருக்கும். ஆனால் அதற்கு மேல் சொல்ல வார்த்தையில்லை. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆளுங்கட்சி அமைச்சர் டார்ச்சர் செய்தார் என்று அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் அதை தொடர்ந்து உயர் அதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது டூபாக்கூர் நிருபர்கள் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என கிருஷ்ணராயபுரம் தாலுக்காவிற்குட்பட்ட வி.. வும், ஆர். யும் சொன்னது வித்தியசமாக இருந்தது. வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அம்மா முகாம், இலவச மிக்ஸி கிரைண்டர் தரும் போது ஒரு மூன்று நிருபர்கள் வருகின்றனர். சார் பணம் கொடுங்கள் என்கின்றனர். நான் 200 ரூபாய் கொடுத்தேன், போதாது சாப்பிட்டிற்காகவது கொடுங்கள் என மிரட்டி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். என்ன பேப்பர் என்று கேட்டதற்கு பேப்பர் பெயரை இது வரை கேட்டதில்லை அந்த பேப்பரையெல்லாம் சொல்கின்றனர். என்றார். ஒரு புறம் இப்படி என்றால் மறுபுறம் எதாவது பிரஸ் மீட்டிற்கு சென்றால் தற்போது தான் 30 பேருக்கு பணம் கொடுத்தேன் என்கின்றனர். எங்களுக்கு பணம் வேண்டாம் பேட்டி மட்டும் கொடுங்கள் என்றாலும் அவர்கள் பேட்டி கொடுத்ததற்கு பிறகு பணம் கேட்பார்கள் என பயப்படுகிறார்கள். காரணம் நிருபர் மிரட்டுவார்கள் என்பது காரணமே, மற்றொரு புறம் குடும்ப அரசியல் உருவாகி வரும் நிலையில் குடும்ப நிருபர்கள் திட்டம் என பல்வேறு புகார்கள் கரூர் மாவட்டத்தில் எழுந்துள்ளது. இதை தாங்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், இப்படியே போனால் கஞ்சா விற்பவனும், கள்ளச்சாராயம் விற்பவுனும், பெண் புரோக்கர்கள் கூட நிருபர்கள் ஆகலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நிருபர்கள் என்றால் 365 ¼ வேலை பார்ப்பவரும் கரூர் மாவட்டத்தில் இருக்கிறார்கள், வருடத்திற்கு ஒரு முறை அதாவது சீசன் பேர்டு போல நிருபராக உலா வருகின்றனர். அதுவும் அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் வரும் போது மட்டும், மேலும் ஒரு சிலர் எலெக்ஷனுக்கு மட்டும் பணிபுரிந்து எலெக்ஸன் நிருபர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். ஒரு சிலர் வாகன்ங்களில் பிரஸ் ஸ்டிக்கர் போடுவதற்காக நிருபர்கள் என கூறிக்கொள்கின்றனர். அதையும் தாங்களே உணர்ந்து கொள்ளுங்கள் என்றும் பத்திரிக்கை துறை புணிதம் வாய்ந்தது என்னைப் பொறுத்தவரை ஆனால் அது இப்போது கரூர் மாவட்டத்தில் நிறைய குற்றங்கள் வாய்ந்தும், கரும்புள்ளி உள்ள துறையாக இருப்பதால் அரசு எனக்கு சுமார் 15 வருடங்களாக கொடுத்த இலவச பஸ் பாஸை தங்களிடம் ஒப்படைக்கிறேன். இதை தாங்கள் கூட தடுக்க முடியாது எனென்றால் இவர்களுக்கு தனி ஒரு சட்டம் இயற்ற வேண்டும், பத்திரிக்கையாளர் ஒழுங்கு முறை ஆணையமும், பத்திரிக்கையாளர் நன்னடத்தை விதியை அமைக்கவு, அதை செயல்படுத்தவும் தாங்கள் சட்டமன்றத்திற்கு பரிந்துரை செய்யலாம் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியல் வரலாற்றிலேயே பத்திரிக்கையின் புனித தன்மையை மதித்து தான் இந்த வேலை செய்துள்ளதாகவும், மேலும் அதிகார துஸ்பிரயோகம் செய்யும் நிருபர்களை அவரவர் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்வதோடு, நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் உண்மையான பத்திரிக்கையாளர்களிடையே பெரும் ஆர்வத்தையும், மற்ற பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மனு கொடுத்து ஒரு வாரம் ஆகியும் இன்றும் ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை. ஒரு பத்திரிக்கையாளராகிய ஆனந்தகுமாரின் மனு மீதே நடவடிக்கை எடுக்க வில்லை. இவர் எப்படி பொதுமக்கள் மனு மீது எப்படி நடவடிக்கை எடுப்பார் என பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்ற வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுவை வாங்கி கொண்டதோடு, பஸ் பாஸை திருப்பி கொடுக்கீறீர்களா என்று கேட்ட வண்ணம் வாங்கிக் கொண்டார்.


No comments:

Post a Comment