Thursday 9 July 2015

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மும்பை "டூ" துபாய் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் - மஸ்கட்டில் அவசர தரையிறக்கம்

மஸ்கட்: மும்பையில் இருந்து புறப்பட்டு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் 54 பயணிகளும், 7 விமான பணியாளர்களும் இருந்தனர். இந்நிலையில், மும்பை கால்சென்டர் ஒன்றுக்கு வந்த தகவலில் 9W536 என்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்ததும் விமானத்தை ஓட்டிய விமானி, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான தகவலை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து உள்ளார். தொடர்ந்து துபாய் நோக்கி சென்ற விமானம், மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. இதையடுத்து மஸ்கட் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து விமானம் மிகவும் பாதுகாப்பாக மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானம் தற்போது மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. விமானநிலைய அதிகாரிகள் ஆலோசித்த பின்னர், விமானத்தை மீண்டும் இயக்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும். விமானத்தில் வெடிகுண்டு என சந்தேகத்திற்கு இடமாக எந்தஒரு பொருளும் கண்டுபிடிக்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment