கல்வி தரத்தில்
தமிழகம் பின்தங்கி உள்ளது – மத்திய அரசின் சி.பி.எஸ்.இ படிப்பிற்கு தகுந்தாற் போல்
கல்வித்தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும்
தமிழ்நாடு பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்) மாநில தலைவர் கரூரில் பேட்டி
தமிழ்நாடு பிராமணர்
சங்கம் (தாம்ப்ராஸ்) கரூர் மாவட்ட அமைப்புகள் மற்றும் கிளைகள் சார்பில் கரூரில் விழா
ஒன்றை இன்று நடத்தியது. கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
நடைபெற்ற இந்த விழாவில் கரூர் மாவட்டத்தில் சாதனை படைத்த பிராமண மாணவ, மாணவியரை பாராட்டி
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடவுள் வாழ்த்துடன், வேத கோஷங்கள் முழங்க, சங்க உறுதி
மொழியுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவரும், கரூர் மாவட்டத்தலைவர்
(தாம்புராஸ்) ஸ்ரீ எஸ்.ஸ்ரீதரன் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மேலும்
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ வித்யா சங்கர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளாசி வழங்கினார். மாநிலத்தலைவரும்,
பிராமண சேவா ரத்னா விருது பெற்றா திருவொற்றியூர் ஸ்ரீ என்.நாராயணன் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு பேசினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேட்டியளித்தார். அப்போது
அவர் பேசியதாவது.,
பிராமணர் சங்கம்
பிராமணர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சங்கம் கிடையாது. மற்ற சமூகத்தினரின் கல்வி மற்றும்
ஏனைய உதவிக்கு 20 சதவிகிதம் உதவுகிறது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை
நாங்கள் வரவேற்கிறோம், 80 விழுக்காடு நல்ல திட்டம், ஆனால் விவசாயிகளுக்கு பாதிப்பு
இல்லாமல் மத்திய அரசும், மாநில அரசும் விளக்க வேண்டும், தமிழகத்தில் கல்வித்தரம் மிகவும் பின் தங்கியுள்ளது.
ஆகவே மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ பாடத்திட்ட அளவில் அதன் தரத்தை உயர்த்த
வேண்டும், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது பெரிய அளவில் பிரச்சினையை கிளாப்புகிறார்கள்.
ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் எதிர்ப்பதில்லை. ஆனால்
உச்ச நீதிமன்ற ஆணைப் படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார். மேலும் இக்கூட்டத்தில் மாவட்டத்
தலைவர் எஸ்.ஸ்ரீதரன், மாவட்டத்துணைத்தலைவர்கள் என்.ஆனந்தநாராயணன், ஜி.சங்கரநாராயணன்,
மாவட்டப் பொதுச்செயலாளர் பி.ஆர்.மகாதேவன், மாவட்டப் பொருளாளர் பி.லக்ஷ்மி நாராயணன்,
மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கடேசன், மாவட்ட இணைச் செயலாளர் எல்.ஆர்.ராஜூ, மாவட்ட இளைஞரணி
செயலாளர் ஜி.வினோத்குமார், மாவட்ட ஆலோசகர் ஹெச்.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment