Tuesday 28 July 2015

முன்னாள் போக்கு வரத்துறை செந்தில்பாலாஜியை மறக்காத இந்நாள் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி




தமிழக அரசியலிலே ஒரு மிகப்பெரிய திருப்பம் என்றால் அது செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவியை பறித்தது என்றால் அது மிகையாகாது. அது போல அந்த பதவி பறிக்கப்பட்டதுடன் அ.தி.மு.க தொண்டர்கள் வெடி வைத்து கொண்டாடியதுடன் தமிழக முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லாரி உரிமையாளர்கள், அமைச்சரால் பாதிக்கப்பட்டவர்கள் என எல்லோரும் நல்ல படியாக சீரும் சிறப்புமாக கொண்டாடி வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் கூட செந்தில்பாலாஜி பெயரை அழித்து மற்றொரு விளம்பரம் எழுதியுள்ளனர். மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வைக்கப்பட்டிருக்கும் நான்காண்டு சாதனையில் கூட செந்தில்பாலாஜி படம் இடம்பெற வில்லை. மாநில முதல்வருக்கு பயந்து போய் அல்ல, அவரின் செயலுக்கு குந்தகம் விளைவிக்காதவாறு அரசு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் நடந்து கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை மட்டும் அதன் இணையதளத்தில் Thiru V.Senthil Balaji , Hon'ble Minister for Transport  என்று இன்று வரை வெளியிட்டு வருகிறது. ஒரு வேளை செந்தில்பாலாஜியும், ராஜேந்திர பாலாஜியும் நண்பர்களாக இருக்கக் கூடும், என்றும் இருவரது பெயரும் ஒரே பெயராக உள்ளது ஆதலால் விட்டு விடுங்கள் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளாரா ? என தெரியவில்லை என்கின்றனர். எது எப்படியோ அதிகாரப் பூர்வமாக வெளியீடு ஜெயா டி.வியிலே வந்து விட்டது என்கின்றனர். அரசு அலுவலர்களும், அரசியல் வாதிகளும். மேலும் பல சீரிய நல்ல திட்டங்களை செய்தி மக்கள் தொடர்பு துறை தான் செய்ய வேண்டும். அப்படி பட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் இணையதளமே இப்படி எல்லாவற்றிலும் சோம்பேறியாகவும், மந்த நிலையில் இருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலை எப்படி சமாளிக்க போகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா என்கின்றனர் பொதுநல வாதிகள்


No comments:

Post a Comment